বাংলায় পড়ুন Read in English
This Article is From Dec 10, 2019

Video: மிஸ் யுனிவர்ஸ் நீச்சல் உடை போட்டியில் ரன்வேயில் விழுந்து வாரிய அழகிகள்

மிஸ் யுனிவர்ஸ் 2019 நீச்சல் உடை சுற்றின்போது 25 வயதான நீல நிற மேலுடையுடன் பிகினியில் நடந்து வந்தபோது விழுந்தார். தான் விழுந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

Advertisement
விசித்திரம் Edited by

தென் ஆப்பிரிக்காவை, மிஸ் பிரான்ஸ் மற்றும் மிஸ் மலேசியா ஆகிய மூவரும் மேடையில் வழுக்கி விழுந்தனர்.

ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸ் 2019 ஆரம்ப கட்ட போட்டியான நீச்சலுடை போட்டியில் கலந்து கொண்ட பலரும் தடுக்கி விழுந்தனர். 

தென் ஆப்பிரிக்காவை, மிஸ் பிரான்ஸ் மற்றும் மிஸ் மலேசியா ஆகிய மூவரும் மேடையில் வழுக்கி விழுந்தனர். நிகழ்ச்சியின்போது போட்டியாளர்கள் தங்களின் நடையை சமநிலையுடன் வைத்துக் கொள்ள பெரிதும் சிரமங்களை அனுபவித்தனர். நல்வாய்ப்பாக நிகழ்ச்சியின் போது யாரும் காயமடையவில்லை. 

மிஸ் யுனிவர்ஸ் 2019 நீச்சல் உடை சுற்றின்போது 25 வயதான நீல நிற மேலுடையுடன் பிகினியில் நடந்து வந்தபோது விழுந்தார். தான் விழுந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.

நேற்றிரவு நான் ஒரு மோசமான அனுபவத்தை உணர்ந்தேன்: மேடையில் விழுந்து எழுவதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டேன். என்னவென்றால் விழுவதும் எழுந்து நிற்பதும் பெண்ணின் வாழ்க்கையில் உண்டு. தடைகளை பொருட்படுத்தாமல் முன்னேறுவது நல்லது.

Advertisement

மலேசியாவின் 22 வயதான ஸ்வேதான் செகோனும் நீச்சலுடை சுற்றில் விழுந்தார். 

Advertisement

செய்தி வலைத்தளமான ஆர்.எஃப்.ஐ படி மிஸ் மால்டா மற்றும் மிஸ் இந்தோனேசியா போன்ற போட்டியாளர்களும் ரன்வேயில் விழுந்துள்ளனர். 

மிஸ் தென்னாப்பிரிக்கா சோசிபினி துன்சி ஞாயிற்றுக்கிழமை மிஸ் யுனிவர்ஸ் 2019 பட்டத்தை பெற்றார். 26 வயதான பெண் தென்னாப்பிரிக்காவின் சோலோவைச் சேர்ந்தவர். 

Advertisement