A cheetah cub practices his sneaking skills in this video.
இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா பகிர்ந்துகொண்டிருந்தார். அதில் “வேட்டையாடுவதற்கான பதுங்கும் திறன்களை ஆரம்பத்தில் கற்றுக்கொள்ளும் சிறுத்தைக் குட்டி. இதன் முதுகில் வெள்ளி துண்டுகள் போல ரோமங்கள் முதுகில் ஓடுகிறது. இந்த பதுங்கும் கலைக்கு இது முழுமையாக முயன்று வருகிறது. இது அதனைச் சிறந்த வேட்டைக்காரர்களாக மாற்றும்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வாறு பகிரப்பட்ட காணொளியில் வெள்ளி கோடிட்ட ரோமங்களை கொண்ட இரண்டு சிறுத்தை குட்டிகள் பதுங்கும் திறனைக் கடைப்பிடிப்பதைக் காணலாம்.
இந்த காணொளி 2.1 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளுக்கு மேல் பெற்றுள்ளது மற்றும் பரவலாகப் பரப்பப்படுகிறது.
ட்விட்டர் பயனர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர் மற்றும் அவர்களின் எதிர்வினைகளால் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரவலாகப் பதியப்பட்டு வருகிறது.
"என் பூனைக்குட்டிகளும் அவ்வாறே செய்கின்றன." என்று ஒரு பயனாளர் தனது கருத்தினை எழுதியிருக்கிறார்.
இந்த அற்புதமான பூனைகளில் சிலவற்றை இந்தியா பெற வேண்டும் ...." என மற்றொருவர் குறிப்பிட்டிருக்கிறார்.
"எந்த வீட்டுப் பூனையையும் போல" என்று ஒருவரும், "ஆஹா ... இது ஆச்சரியமாக இருக்கிறது" என்று மற்றொருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)