This Article is From Oct 15, 2018

கடும் புயலிலும் சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கிய துணிச்சல் விமானி!!

ஓடுதளத்தில் விமானத்தை இறக்க முயன்றபோது, பலத்த காற்று வீசியதால், ஓடுதளத்திற்கு அருகில் விமானத்தை தரையிறக்கினார் விமானி.

கடும் புயலிலும் சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கிய துணிச்சல் விமானி!!

டியுஐ ஏர்வேஸின் விமானம் சக்திவாய்ந்த புயலின் போது ஓடுதளத்திற்குக் அருகில் தரையிறக்கப்பட்டது.

இங்கிலாந்தில், கால்லம் புயலின் போது, பிரிஸ்டோல் விமான நிலையத்தில் சாதுர்யமாக விமானத்தை தரையிறக்கினார். தற்போது இதுகுறித்த வீடியோ இணையதளத்தில்

வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம் அக்.2ம் தேதி நிழந்தது. இந்த வீடியோ காட்சி கால்லம் புயலில் விமானத்தை தரையிறக்குவதில் இருந்த சவாலை விளக்குகிறது.

புயல்காற்றினை நோக்கி விமானத்தின் முன்பகுதியினை செலுத்தி திறமையாக விமானத்தை விமானி தரையிறக்கினார்.

மிஸ்டர் ஏவியேஷன்கய் என்ற யூடியூப் பக்கம், விமானி இந்த செயல் சரியானது என்று அறிவியல் ரீதியாக விளக்கியுள்ளது.

கால்லம் புயல், பலத்தை மழை மற்றும் காற்று மூல, இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளை தாக்கியது.

இந்த வீடியோ விமானிக்கு பலத்த பாராட்டை பெற்று தந்துள்ளது. இதனை பலரும் புத்திசாலித்தனமானது, நம்பமுடியாதது மற்றும் என கச்சதமானது என பாரட்டி வருகின்றனர்.


 

 

Click for more trending news


.