This Article is From Aug 26, 2018

வீடியோ: குவைத் சாலையில் கூலாக சுற்றிய சிங்கம்

யாரேனும் வீட்டில் செல்லமாக வளர்த்து வந்த சிங்கமாக இருக்கலாம் என்று சந்தேகம்

வீடியோ: குவைத் சாலையில் கூலாக சுற்றிய சிங்கம்

சாலையில் சுற்றித் திரியும் சிங்கம்

குவைத் நாட்டிலுள்ள கபாத் மாவட்டத்தில் மக்கள் வசிக்கும் பகுதியில் பெரிய சிங்கம் ஒன்று சுற்றித் திரிந்த வீடியோவை அந்நாட்டு அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். நல்லவேளையாக யாரையும் தாக்குவதற்கு முன்பே அதைப் பாதுகாப்பாகப் பிடித்துவிட்டனர். இச்சிங்கத்தை யாரோ ஒருவர் செல்லப்பிராணியாக வீட்டில் வளர்த்து வந்திருக்கவேண்டும். அங்கிருந்துதான் இது தப்பி வந்து சாலைகளில் திரிந்துள்ளது என்று அதிகாரிகள் கருதுகின்றனர். பிடிபட்ட சிங்கம் தற்போது குவைத் விலங்குகாட்சி சாலையில் சேர்க்கப்பட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் காவல், அல்-நஜ்தா காவல்துறை ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் சிங்கம் உலவித் திரிந்த செய்தி கிடைத்ததும் அவ்விடத்துக்கு விரைந்தனர். பின்பு மயக்க ஊசி செலுத்தி அதனைப் பிடித்துள்ளனர் என்று உள்ளூர் செய்தி ஊடகங்ககள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான அதிர்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் பரபரப்பாகக் காணப்படும் சாலை ஒன்றில் சிங்கம் நடந்து வரும் காட்சிகள் பதிவாகி உள்ளன. கீழே உள்ள வீடியோவைக் காண்க:

“எங்கிருந்து இது வந்தது?”, “பயங்கரமாக இருக்கிறதே” என்று பலரும் இவ்வீடியோவின் கீழ் கமெண்ட் செய்து தங்கள் அச்சத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

“இது யாரோ வீட்டில் செல்லப்பிராணியாக வளர்த்துவந்த சிங்கம்தான். அவரைத் தேடி வருகிறோம். சிக்கினால் மூன்றாண்டு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். வன விலங்குகளை வீட்டில் வளர்ப்பது குவைத்தில் சட்டப்படி குற்றச்செயலாகும்” என்று குவைத் கால்நடை ஆணைய துணை இயக்குநர் அலி அல்-கட்டன் கூறியுள்ளார்.

சென்ற ஆண்டு இதேபோல பாகிஸ்தானில் ஒருவர் தனது காரில் சிங்கத்தை வெளியே ஹாயாக கூட்டிச்செல்லும் காட்சி பதிவானது. அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது சொன்ன பதில் என்ன தெரியுமா? “சிங்கத்துக்கு உடம்பு சரியில்லைங்க! அதான் டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போறேன்” என்பதுதான்.

Click for more trending news


.