This Article is From Nov 22, 2018

வாக்குச்சாவடிக்குள் பூஜை செய்த சத்தீஸ்கர் அமைச்சர்… கலகல சம்பவம்!

அவர் மேலும், ‘வீடியோவில் வாக்குச் சாவடியின் எண் தெரியவில்லை. இதனால், எந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது என்பது தெரியவில்லை

வாக்குச்சாவடிக்குள் பூஜை செய்த சத்தீஸ்கர் அமைச்சர்… கலகல சம்பவம்!

இந்த விவகாரம் குறித்து பேமேத்ரா மாவட்ட ஆட்சியரும் மவாட்ட தேர்தல் அதிகாரியுமான மகாதேவ் காவ்ரே, அமைச்சரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

Raipur:

சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளன. தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்த போது, வாக்களிக்கும் இயந்திரத்துக்கு அம்மாநில அமைச்சர் தயால்தாஸ் பாகல் பூஜை செய்துள்ள வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

பாஜக சார்பில் இந்த முறை நவகர் தொகுதியிலிருந்து போட்டியிட்டுள்ளார் பாகல். அவருக்கு, நவகர் தொகுதியின் தேர்தல் அதிகாரி, வீடியோ குறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநில பேமேத்தரா மாவட்டத்தின் நவகர் தொகுதியில் வாக்குப் பதிவு ஆரம்பிக்கும் முன்னர், பாகல் பூஜை செய்துள்ளதாக தெரிகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடந்த போது, நவகர் தொகுதியில் வாக்குப் பதிவு நடந்தது.

இந்த விவகாரம் குறித்து பேமேத்ரா மாவட்ட ஆட்சியரும் மவாட்ட தேர்தல் அதிகாரியுமான மகாதேவ் காவ்ரே, ‘வீடியோ வெளியானதை அடுத்து, பாகலிடம் 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளோம்' என்று தகவல் தெரிவித்தார்.

அவர் மேலும், ‘வீடியோவில் வாக்குச் சாவடியின் எண் தெரியவில்லை. இதனால், எந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது என்பது தெரியவில்லை. இது தேர்தல் விதிமுறைகளுக்குப் புறம்பானது' என்றுள்ளார்.

பாஜக அமைச்சரின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சி, ‘ஜனநாயகத்தில் அரசியல் கட்சியின் தலைவர் மக்களையும் வாக்காளர்களையும் தான் வணங்க வேண்டும். தேர்தல் இயந்திரங்களை அல்ல. 15 ஆண்டுகளாக மக்களுக்கான பணி செய்யாமல் இருந்த பாஜக-வினர், தேர்தல் இயந்திரங்களுக்கு பூஜை செய்தால் மட்டும் மாற்றம் நிகழ்ந்து விடாது' என்று கூறியுள்ளது.

.