குஜராத்தின் ‘சர் க்ரீக்’ என்று சொல்லப்படும் இடத்திற்கு அருகில் ஆள் இல்லாத படகுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் முன்னெச்சரிக்கை செய்துள்ளது ராணுவம்.
NEW DELHI: பாகிஸ்தானின் எல்லை அதிரடி குழு (BAT), இந்தியாவுக்குள் ஊடுருவ எடுத்த முயற்சியை ராணுவம் தடுத்து நிறுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் நடந்ததாக இந்திய ராணுவத் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்தான வீடியோ தற்போது ராணுவத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான் எல்லை அதிரடி குழு மற்றும் தீவிரவாதிகளின் உடல்கள், அவர்கள் கொண்டு வந்த உபகரணங்கள் சிதறிக்கிடப்பது வீடியோவில் தெரிகிறது.
இந்நிலையில் தென்னிந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கைத் தகவல் கொடுத்துள்ளது இந்திய ராணுவத் தரப்பு. குஜராத்தின் ‘சர் க்ரீக்' என்று சொல்லப்படும் இடத்திற்கு அருகில் ஆள் இல்லாத படகுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் முன்னெச்சரிக்கை செய்துள்ளது ராணுவம்.
“தென்னிந்தியாவில் தீவிரவாத தக்குதல்கள் நடக்க வாய்ப்புள்ளதாக எங்களுக்கு தகவல்கள் வந்துள்ளன. சர் க்ரீக் பகுதியிலிருந்து ஆளற்ற படகுகள் கண்டறியப்பட்டுள்ளன. அதை மனதில் வைத்து அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன” என்று தெற்கு கமாண்டின், ஜி.ஓ.சி, எஸ்.கே.சைனி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தகவல் தெரிவித்துள்ளார்.