This Article is From Jun 23, 2020

சுமூக பேச்சுவார்த்தையின் போது இந்தியா- சீனா வீரர்கள் இடையே மோதல்! (வீடியோ)

அந்த வீடியோ காட்சிகளில், சீன அதிகாரியை இந்திய வீரர்கள் சரமாரியாக தாக்குகின்றனர்.

Sikkim:சுமூக பேச்சுவார்த்தையின் போது இந்தியா- சீனா வீரர்கள் இடையே மோதல்! (வீடியோ) (File)

ஹைலைட்ஸ்

  • சுமூக பேச்சுவார்த்தையின் போது இந்தியா- சீனா வீரர்கள் இடையே மோதல்
  • மோதல் ஏற்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • சீன அதிகாரியை இந்திய வீரர்கள் சரமாரியாக தாக்குகின்றனர்.
New Delhi:

லடாக் மோதல் நடந்து ஒரு சில நாட்களில், சிக்கிமில் மீண்டும் இந்தியா - சீனா வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிட்டதட்ட ஐந்து நிமிடம் ஓடும் அந்த வீடியோ காட்சிகளில், சீன அதிகாரியை இந்திய வீரர்கள் சரமாரியாக தாக்குகின்றனர். இருதரப்பினரும் மொபைல் போன்களில் வீடியோ எடுத்தபடி இருக்கின்றனர். 

பனியால் சூழப்பட்ட அந்த மலைப்பகுதியில் இந்தியா - சீனா வீரர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். திரும்பி செல்லுங்கள், சண்டையிட வேண்டாம் என்று இரு தரப்பிலிருந்தும் வீரர்கள் கூச்சலிடுகின்றனர். எனினும், ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படுகிறது. 

இப்படி, இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக்கொண்டிருந்த நிலையில், இந்திய வீரர்களால் தாக்கப்பட்ட ஒரு சீன வீரருக்கு எதுவும் ஆகவில்லையே என இந்திய அதிகாரி கேட்கிறார். இதைத்தொடர்ந்து, மோதல் முடிந்தது. 

கிழக்கு லடாக் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15ம் தேதி இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் 20க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். 76 பேர் வரை காயமடைந்தனர். 

இதைத்தொடர்ந்து, இரு தரப்புக்கும் இடையிலும் சுமூக பேச்சுவார்த்தை காண மால்டோவில் நேற்று லெப்டினென்ட் ஜெனரல் மட்டத்திலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தான் இந்த வீடியோ படமாக்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

முன்னதாக, கடந்த ஜூன்.6ம் தேதி நடந்த ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் அத்துமீறி குவிக்கப்பட்ட ராணுவ வீரர்களை திரும்ப பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. எனினும், எடுக்கப்பட்ட முடிவுகளை சீன தரப்பு அமல்படுத்தவில்லை.

இதனிடையே, முதல்முறையாக இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் மோதலில் சீன ராணுவத்தின் கமாண்டர் நிலையிலான அதிகாரி ஒருவர் உயிரிழந்ததை சீன தரப்பு உறுதி செய்துள்ளது.

.