வீடு இடிந்து விழுந்தபோது வீட்டிற்குள் யாரும் இல்லை
New Delhi: தேசிய தலைநகரான டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஐ.டி.ஓ பகுதியில் உள்ள குடிசைவாழ் பகுதியில் உள்ள ஒரு வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது.
இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
கழிவு நீர் இந்த கட்டிடத்தின் அருகில் உள்ள பள்ளத்தில் பாய்ந்தோடியபடி இருக்கின்றது. பள்ளத்தின் அருகே உள்ள கட்டிடம் திடீரென சரிந்து முற்றிலுமாக உருக்குலைந்து பள்ளத்தில் வீழ்கின்றதை வீடியோவில் காண முடிகின்றது. சம்பவம் நடந்த நேரத்தில் யாரும் கட்டிடத்தில் இல்லை என்று அதிகாரிகள் என்டிடிவிக்கு தெரிவித்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் மையப்படுத்தப்பட்ட விபத்து மற்றும் அதிர்ச்சி சேவைகள் (CATS) மற்றும் தீயணைப்பு வாகணங்கள் மீட்புப் பணிக்காக அங்கிருந்தன.
அதிகாலை 5:30 மணி வரை, சஃப்தர்ஜங் ஆய்வகத்தில் 4.9 மிமீ மழை பதிவாகியுள்ளது. பாலம் வானிலை நிலையம் 3.8 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய முன்கணிப்பு மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா, “தில்லி-என்.சி.ஆரின் சில பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளது.” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக தேசிய வானிலை ஆய்வு மையம் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் கனமழை முதல் அதிக மழை பெய்யும் என்று கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.