हिंदी में पढ़ें Read in English
This Article is From Nov 17, 2019

உ.பியில் விவசாயின் காய்கறி கடையினை நசுக்கிய அரசு அதிகாரியின் வாகனம்

வாகனம் விவசாயியின் காய்கறிகளை நசுக்க பல முறை வருவதைப்பார்க்கலாம். வேறுசில அரசாங்க அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

Advertisement
நகரங்கள் Edited by
Hapur, Uttar Pradesh:

உத்தரபிரதேச மாநிலத்தின் மூத்த அரசாங்க அதிகாரியின் எஸ்யூவி வாகனம் விவசாயின் காய்கறி கடையின் மீது ஏறி கடையினை சேதப்படுத்தியது. 

டெல்லியிலிருந்து 73 கி.மீ தூரத்தில் உள்ள ஹப்பூர் மாவட்டத்தில் மாநில அரசு நடத்தும் விவசாயிகளுக்கு சந்தையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒரு விவசாயி அனுமதியின்றி காய்கறிகளை விற்பதற்கான முயற்சியில் இறங்கியதாக கூறப்படுகிறது.
 

போனில் எடுக்கப்பட்ட வீடியோவில் சந்தையின் செயலாளரான சுஷில் குமாரின் அதிகாரப்பூர்வ வாகனம் விவசாயியின் காய்கறிகளை நசுக்க பல முறை வருவதைப்பார்க்கலாம். வேறுசில அரசாங்க அதிகாரிகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் பிளாஸ்டிக் கூடைகளை அகற்றுகிறார்கள். 

மூத்த அதிகாரி ஓட்டுநரை சம்பவ இடத்திலேயே கண்டித்துள்ளார்.  சாலைகளில் அமர வேண்டாம் என்று பல முறை கூறியும் அவர்கள் கேட்கவில்லை. கடைகள் இல்லாதவர்கள் உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறியுள்ளார். சிக்கல் ஏதேனும் எழுந்தால் என்னிடம் சொல்லுங்கள் என்று அவர் தெரிவித்தார். 

Advertisement
Advertisement