Read in English
This Article is From Aug 05, 2019

லிப்டில் சிக்கிய தன் சகோதரனை புத்திசாலித்தனமாக காப்பாற்றிய சகோதரி - வைரல் வீடியோ

கையில் கயிறுடன் ஒரு சிறுவன் ஏறுகிறான். கயிறின் ஒரு நுனி லிப்டின் கதவுக்கு இடையில் சிக்கிக் கொள்ள அதன் மறுநுனி சிறுவனின் தலையில் உள்ளது. லிப்ட் செயல்படத் தொடங்கவும் சிறுவன் கயிற்றில் தொங்கத் தொடங்கிறான்.

Advertisement
விசித்திரம் Edited by

பலர் இந்த வீடியோவைக் கண்டு சிறுமியின் சமயோசிதத்தை பாராட்டி வருகின்றனர்.

துருக்கி இஸ்தான்புல்லில் லிப்டில் சிக்கிய தன் சகோதரனை சமயோசிதமாக காப்பாற்றிய சிறுமிக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.  இந்த சம்பவம் அங்கிருந்த லிப்டில் பாதுகாப்புக்கு வைத்திருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. 

அந்த வீடியோவில் லிப்டில்  2 சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி ஏறுகிறாரகள். கையில் கயிறுடன் ஒரு சிறுவன் ஏறுகிறான். கயிறின் ஒரு நுனி லிப்டின் கதவுக்கு இடையில் சிக்கிக்  கொள்ள அதன் மறுநுனி சிறுவனின் தலையில் உள்ளது. லிப்ட் செயல்படத் தொடங்கவும் சிறுவன் கயிற்றில் தொங்கத் தொடங்கிறான். அருகில் இருந்த சிறுவனின் சகோதரி மூச்சு திணறாமல் இருக்க கால்களை உயர்த்தி பிடித்துக் கொண்டபடி எம்ர்ஜென்ஸி பட்டனை அழுத்துகிறாள்

வீடியோவை கீழே பார்க்கலாம்

Advertisement

பலர் இந்த வீடியோவைக் கண்டு சிறுமியின் சமயோசிதத்தை பாராட்டி வருகின்றனர். 

Advertisement

உள்ளூர் செய்தியாளர்கள் வெளியிட்ட செய்தியில் சிறுவன் நலமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 

Advertisement