ஆற்றில் மிதந்தது அச்சுறுத்தும் வகையில் இருந்ததால், இந்த வீடியோவை பலரும் பகிர்ந்தனர்.
பாம்பைப் போன்ற தோற்றம் கொண்ட பொருள் ஒன்று சீனாவின் யான்ஸ் ஆற்றில் மிதந்து வந்தது. இது அனகோண்டாவாக இருக்கும் என்ற சந்தேகத்திலும், குழப்பத்திலும் இருந்த நெட்டிசன்கள் இந்த வீடியோவை வைரலாக்கி உள்ளனர்.
இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இருப்பினும் இது 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை மிகக் குறைந்த நேரத்தில் பெற்றிருக்கிறது. ஹூபே மாகாணத்தில் உள்ள கார்ஜஸ் அணை அருகேதான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
கடைசியாக மிதந்து வந்த 65 அடி பொருள் என்ன என்பதை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் அந்தப் பொருள் அனகோண்டா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
அதனை முற்றிலும் ஆய்வு செய்ததில், தொழிற்சாலையில் இருந்து கழிவாக வெளியேற்றப்பட்ட காற்று நிரம்பிய பை என தெரியவந்தது. கடைசியில் அந்தப் பையை அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள்.
Click for more
trending news