বাংলায় পড়ুন Read in English
This Article is From Oct 26, 2018

‘சிபிஐ இயக்குநருக்கு எதிரான விசாரணை 2 வாரத்தில் முடிக்கப்பட வேண்டும்’- உச்ச நீதிமன்றம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா, மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்

Advertisement
இந்தியா
New Delhi:

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள சிபிஐ இயக்குநர் அலோக் வெர்மா, மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், ‘இடைக்கால நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கும் நாகேரஸ்வர் ராவ், அமைப்பின் பாலிசி முடிவுகளை எடுக்க முடியாது' என்று தீர்ப்பளித்துள்ளது. 

அலோக் வெர்மா, அரசு தன்னை கட்டாய விடுப்பில் அனுப்பியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘அரசுக்கு சாதகமாக சில வழக்கு விசாரணையில் முடிவெடுக்கப்படவில்லை என்ற காரணத்தால் சிபிஐ-க்கு சிக்கல் எழுந்துள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, அலோக் வெர்மாவின் மனுவை விசாரித்தது. உச்ச நீதிமன்ற அமர்வில் நீதிபதிகள் கே.எல்.கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் ஆகியோரும் இருந்தனர். 
 

மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன், அலோக் வெர்மா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடினார். அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், மத்திய அரசு சார்பில் ஆஜரானார். சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, விஜிலன்ஸ் ஆணையத்துக்காக வாதாடினார். அதேபோல, அஸ்தானாவுக்காக வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகினார்.

Advertisement

வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றம், ‘இந்த விவகாரம் தொடர்பாக விஜிலன்ஸ் கமிஷன் 10 நாட்களுக்கு விசாரணை நடத்தி முடிக்க வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி ஏகே பட்நாயக், மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். சிபிஐ இடைக்கால இயக்குநராக இருக்கும் நாகேஸ்வர் ராவ், வழக்கமான வேலைகளை செய்யலாம். 

விஜிலன்ஸ் கமிஷன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, '10 நாட்களில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி முடிப்பது கடினம்' என்று வாதிட்டார். 

அதேபோல வழக்கறிஞர் நாரிமன், ‘விஜிலன்ஸ் கமிஷன் மற்றும் மத்திய அரசு, பிறப்பித்த உத்தரவுகள் சட்டத்துக்கு எதிரானது ஆகும்' என்று கூறினார். வழக்கு மீண்டும் நவம்பர் 12 ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

சில நாட்களுக்கு முன்னர் அலோக் வெர்மா, அஸ்தானா மீது 3 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி எப்.ஐ.ஆர் பதிவு செய்தார். ஆனால் வெர்மாவின் நடவடிக்கைக்கு சில மாதங்களுக்கு முன்னர் அஸ்தானா, அவர் தான் 2 கோடி ரூபாய் லஞ்சப் பணம் பெற்றுள்ளார் என்று அரசுக்கு எழுத்துபூர்வமாக புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் தான் சிபிஐ-க்குள் பனிப் போர் மூண்டது. 

நேற்று அலோக் வெர்மாவின் டெல்லி வீட்டுக்கு அருகில் சிலர் நோட்டமிட்டனர். இதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் நோட்டமிட்ட நபர்களை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்த சம்பவமும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளானது.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் தரப்பு, ‘சிபிஐ இயக்குநரை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் எதிர்கட்சித் தலைவரின் அனுமதி இல்லாமல் நீக்க முடியாது. இது குறித்து சட்ட சாசனம் தெளிவாக வரையறுத்த போதிலும், அதற்கு எதிராக பாஜக அரசு செயல்படுகிறது' என்று குற்றம் சாட்டியுள்ளது.

Advertisement

 

Advertisement