This Article is From Feb 11, 2020

“நெய்வேலியே அதிருச்சுல…”- விஜய்யின் மாஸ் பற்றி கருணாஸ்!!

Vijay IT Raid Row: "விஜய் வருமான வரித் துறை விசாரணை என்று அழைத்ததால், அந்தப் பகுதியில் இருக்கும் அவரது பல லட்சம் ரசிகர்கள் கூடியுள்ளார்கள்"

“நெய்வேலியே அதிருச்சுல…”- விஜய்யின் மாஸ் பற்றி கருணாஸ்!!

Vijay IT Raid Row: "நெய்வேலியில் கடந்த பல நாட்களாக மாஸ்டர் பட ஷூட்டிங் நடந்து வருகிறது"

Vijay IT Raid Row: கடந்த ஆண்டு வெளியான ‘பிகில்' திரைப்படத்தின் வசூல் குறித்து, சில நாட்களுக்கு முன்பு நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தியது. இரண்டு நாட்கள் நடந்த இந்த விசாரணையின் போது விஜய்யின் வீட்டில் வருமான வரித்துறை சோதனையும் நடந்தது. மேலும் இந்த விசாரணை மற்றும் சோதனையால் விஜய் தற்போது நடித்து வரும் ‘மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பும் அவர் இல்லாமல் இரண்டு நாட்கள் பாதித்து. 

தற்போது மீண்டும் நெய்வேலியில் படக்குழுவினருடன் ஷூட்டிங்-ஐ ஆரம்பித்துள்ளார் விஜய். இந்த ரெய்டு விவகாரத்தால் அதிருப்தியில் இருந்த விஜய்யின் ரசிகர்களில் லட்சக்கணக்கானோர் நெய்வேலியில் அவருக்கு ஆதரவாக திரண்டனர். இந்த சம்பவம் கடந்த சில நாட்களாக பேசு பொருளாக இருந்து வரும் நிலையில், அது குறித்துப் பேசியுள்ளார் நடிகரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ். 

செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்துப் பேசிய கருணாஸ், “நெய்வேலியில் கடந்த பல நாட்களாக மாஸ்டர் பட ஷூட்டிங் நடந்து வருகிறது. அது குறித்து வெளியே பெரிதாக யாருக்கும் தெரியவில்லை. அவர் ரசிகர்களுக்கும் கூட தெரியவில்லை. நெல்வேலி என்எல்சி-க்கு வெளியே செக்யூரிட்டிகள் மட்டும்தான் நின்றிருந்தனர்.

ஆனால், விஜய் வருமான வரித் துறை விசாரணை என்று அழைத்ததால், அந்தப் பகுதியில் இருக்கும் அவரது பல லட்சம் ரசிகர்கள் கூடியுள்ளார்கள். இதன் மூலம் விஜய்க்கு எந்தளவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை இந்த தமிழக அரசும் மத்திய அரசும் தெரிந்து கொண்டிருக்கும்,” என்று கருத்து கூறினார். 


 

.