London: விஜய் மல்லையா பண மோசடி செய்ததாக சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும், குற்றத்தை நிரூபிக்கின்றன. ஆகையால் மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்த வேண்டும் என சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இதை மறுத்த மல்லையாவின் தரப்பு, அவர் மோசடி செய்யும் நோக்கில் எதையும் செய்யவில்லை என்றும், இந்தியாவில் சரியான நீதி விசாரணை மல்லையாவுக்கு கிடைக்காது எனவும் வாதிடப்பட்டது.
கடந்த மாதம் இதே போல, சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வைக்கும் குற்றட்ச்சாட்டுகள் ஆதாரமற்றைவை என்றும், பொய்யான குற்றச்சாட்டுகள் என்றும் கூறியிருந்தார்.
உயர் நீதிமன்றம் ஒன்றில், எஸ்.பி.ஐ வங்கி தொடர்ந்த வழக்கில், மல்லையாவை உலகம் முழுவதும் முடக்க உத்தரவை வழங்கியது.
மேலும், மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்த அனுமதி வேண்டியும் இந்தியா மனு செய்துள்ளது. இதிலிருந்து மல்லையா தப்பிக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார்.