This Article is From Jun 10, 2019

விஜய் மல்லையாவை பார்த்து ‘திருடன் திருடன்’ என்று கூச்சலிட்ட மக்கள் - வீடியோ

வீடியோ காட்சியில் சிறு குழு மக்கள் “இவன் ஒரு திருடன்” என்று கூறி கோஷமிட்டனர். மேலும் “ மனிதனாக இருங்கள், உங்கள் நாட்டிடம் மன்னிப்பு கேளுங்கள்” என்று மக்கள் கூக்குரல் இட்டனர்.

விஜய் மல்லையா கேட்காதது போல் கடந்து சென்று விட்டார்.

London, England:

தொழிலதிபர் விஜய் மல்லையா நேற்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியினை காண வந்த போது அங்கிருந்த இந்திய மக்கள் குழு “சோர் ஹே”  அதாவாது இவன் ஒரு திருடன் என்று கத்தி கோஷமிட்டனர்.  நேற்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்க் இடையே உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.  அதைக் காண வந்திருந்தால் விஜய் மல்லையா. இந்தியாவில் விஜய் மல்லையா ரூ. 9,000 கோடி வரை வங்கியில் மோசடி செய்துள்ளார். 

இது குறித்து ஏஎன் ஐ செய்தி நிறுவனத்திடம் பேட்டி கொடுத்த விஜய் மல்லையா, “விளையாட்டை பார்க்கவே வந்தேன்” என்று கூறியவர் “ஜூலையில் விசாரணைக்காக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார்

வீடியோ காட்சியில் சிறு குழு மக்கள் “இவன் ஒரு திருடன்” என்று கூறி கோஷமிட்டனர். மேலும் “ மனிதனாக இருங்கள், உங்கள் நாட்டிடம் மன்னிப்பு கேளுங்கள்” என்று மக்கள் கூக்குரல் இட்டனர். இதனை விஜய் மல்லையா கேட்காதது போல் கடந்து சென்று விட்டார். 

விஜய் மல்லையாவை நோக்கி இப்படி கோஷமிடுவது முதன் முறையல்ல. 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா  மற்றும் தென் ஆப்பிரிக்காவும் போட்டியின் போதும்  “திருடன், திருடன்” என்று மக்கள் கத்தி கோஷமிட்டனர்.

ஏஎன்ஐ தரவுகள்

.