Vijay Mallya: 9,000 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் சிக்கிய விஜய் மல்லையா
New Delhi/London: பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியை குறித்து இன்று யூ.கே. நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளிக்க உள்ளது. விஜய் மல்லையா (62) தனது ‘கிங்விஷர் ஏர்லையின்ஸ்' நிறுவனத்தின் மீது ரூபாய் 9000 கோடி கடனாக வாங்கிகளில் வாங்கி அதனை அடைக்காத காரணத்தால் நாட்டைவிட்டு வெளியேறினார்.
அதைதொடர்ந்து லண்டனில் தஞ்சமடைந்த விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க கோரி நடந்த வழக்கில் இன்று தீர்பு வெளியாகிறது.
இந்த வழக்கை பற்றிய 10 முக்கிய தகவல்கள்;
1. இன்று வரும் தீர்ப்பு இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்தால் விஜய் மல்லையாவுக்கு அங்குள்ள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும். இந்திய அரசுக்கு எதிராக இருந்தால் மேல் முறையிடு செய்ய அரசுக்கு 14 நாட்கள் அவகாசம் மட்டுமே கிடைக்கும்.
2. தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் விஜய் மல்லையா, பல முறை தனது கடன்களை திருப்பி எடுத்துக்கொள்ள வங்கிகளிடம் கேட்டுக்கொண்டார். ‘நான் பணத்தை திருடியதாக வரும் வதந்திகள் என்னைப் பாதிக்கிறது' என ட்விட்டர் பதிவில் தன் கருத்துக்களை கூறியுள்ளார்.
3. ‘நான் கடன் வாங்கவில்லை; கிங்விஷ்ர் ஆர்லையின்ஸ் நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக தான் வாங்கப்பட்டது, எதிர்பாராத திடீர் நஷ்டத்தால் மட்டுமே இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது' என விஜய் மல்லையா கூறியுள்ளார்.
4. விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் குழு சார்பாக 2016 -ல் 80 % கடனை திருப்பி செலுத்த முடிவெடுத்தது. அதைதொடர்ந்து பல முறை பேச்சுவார்த்தை நடந்த்து.
5. மேலும் இந்திய பிரதமர் மோடிக்கு, மல்லையா எழுதிய கடிதத்தில் அவர் மீதுள்ள குற்றங்களை ஒரு குழு வைத்து விசாரணை செய்யக்கோரி எழுதினார். ஆனால் அக்கடித்திற்க்கு, நிதியமைச்சரோ பிரதமரோ பதில் அளிக்கவில்லை என மல்லையா புகார் கூறினார்.
6. விஜய் மல்லையா தன்னை அடைக்கப்போவதாக கூறப்படும் சிறையில் போதிய காற்று மற்றும் வெளிச்ச வசதிகள் இருக்காதெனவும் யூ.கே நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன் வைத்தார். அதைத்தொடர்ந்து இந்திய அரசு சார்பாக கொடுக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தில் பாராக் 12 என்னும் ஆர்த்தர் சாலை சிறையில் மல்லையா அடைக்கப்பபடப் போவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
7. மேலும் இது குறித்து மோடி அரசாங்கம் யூ.கே பிரதமர் தெரேசா மேவிடம், இந்திய அரசின் சிறைச்சாலைகளின் நிலையை குறித்து கேட்பது அதிகாரத்தை மீறும் செயல் எனவும் இங்குள்ள பல சிறைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் கட்டப்பட்ட சிறைச்சாலைகள் என கூறினார்.
8. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் நாடின் நிதி அமைச்சருடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக மல்லையா கூறினார். முன்னாள் ராஜைய சபா உறுப்பினரான விஜய் மல்லையாவை தான் சந்திக்கவில்லை என்னும் ஊடகங்களுக்கு இதுபோன்று அவதுறு தகவல்களை தர வேண்டாம் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
9. கடந்த மாதம் யூ.கே அரசாங்கம் விஜய் மல்லையாவுக்கு 88,000 பவுண்டுகள் அபராதம் விதித்தது. சுவிஸ் வங்கியிடம் தான் பெற்ற 20.4 மில்லியன் விட்டு அடமான கடனை திருப்பி செலுத்தாதலால் இந்த நடவடிக்கையை யூ.கே அரசு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
10. விஜய் மல்லையாவை தொடர்ந்து, பிரபல நகைக்கடை உரிமையாளர் நீரவ் மோடி மற்றும் அவரின் உறவினரான மேகூல் சோஸ்கி நாட்டைவிட்டு தப்பிச் சென்றதற்க்கு மத்திய அரசு உதவியுள்ளதாக எதிர்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.