This Article is From Aug 29, 2020

“கொரோனாவிலிருந்து மீண்ட பின்னர்தான் என் தந்தையின் உயிர் பிரிந்தது!”- வசந்தகுமார் மகன் விஜய் வசந்த்

இரண்டு முறை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் வசந்தகுமார்.

“கொரோனாவிலிருந்து மீண்ட பின்னர்தான் என் தந்தையின் உயிர் பிரிந்தது!”- வசந்தகுமார் மகன் விஜய் வசந்த்

நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கன்னியாகுமரியின் காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், அவரது மகன் விஜய் வசந்த், அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். 

‘வசந்த் & கோ' நிறுவனத்தின் உரிமையாளரான வசந்தகுமார், கடந்த ஆக.10ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை, நேற்றைய தினம் மிகவும் கவலைக்கிடம் அடைந்த நிலையில், நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் விஜய் வசந்த், “என் தந்தைக்கு கொரோனா தொற்று இருந்தது. ஆனால், சில நாட்களுக்கு முன்னர் அதிலிருந்து அவர் மீண்டார். மீண்டும் அவருக்கு கொரோனா வைரஸ் தொடர்பான சோதனை செய்தபோதும், தொற்று பாதிப்பிலிருந்து மீண்டதாகவே முடிவுகள் வந்தன. அவர் இறந்தது அடுத்து ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பினால்தான்” என்று தகவல் தெரிவித்துள்ளார். 

இரண்டு முறை நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் வசந்தகுமார். 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் நாங்குநேரியின் எம்எல்ஏ-வாக இரண்டாவது முறை அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வந்த நாடாளுமன்றத் தேர்தலில், கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எம்.பி-யாக பொறுப்பேற்றார். தொடர்ந்து தன் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் வசந்தகுமார். நாங்குநேரி தொகுதிக்கும் கன்னியாகுமரி தொகுதிக்கும் பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்துள்ளார் வசந்தகுமார்.

.