Bigil breaks Box-Office record - கேரளாவைப் பொறுத்தவரையிலும், பிகில் திரைப்படம்தான், அதிக வசூல் வேட்டையில் ஈடுபட்ட தமிழ் திரைப்படமாம்.
Bigil breaks Box-Office record - தீபாவளிக்கு வெளியான ‘தளபதி' விஜய்யின் (Vijay) ‘பிகில்' (Bigil) திரைப்படம், பொங்கலுக்கு வெளியான ‘தல' அஜித்தின் (Ajith) ‘விஸ்வாசம்' (Viswasam) படத்தின் வசூலை மிஞ்சியுள்ளது. தமிழகத்தில் விஸ்வாசம் எடுத்த கலெக்ஷனை ஒப்பிடும்போது, பிகில்-ன் கலெக்ஷன் எகிறியுள்ளது.
சினிடிராக் என்னும் பாக்ஸ்-ஆபீஸ் வசூல் விவரங்களை கண்காணித்து வரும் தளம் வெளியிட்டுள்ள தகவல்படி, ‘பிகில் திரைப்படம் தனது 4வது வார ஓட்டத்தின்போது தமிழகத்தில் 141.05 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது. அஜித்தின் விஸ்வாசம் படம், மொத்தமாக 140 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டில் தமிழகத்தில் அதிக வசூல் வேட்டையில் ஈடுபட்ட படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது பிகில்.
அதேபோல தென்னிந்திய மார்க்கெட்டைப் பொறுத்தவரை பிகில், 200 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறதாம். ரஜினி, பிரபாஸ், யாஷ் ஆகிய ஹீரோக்களைத் தொடர்ந்து இந்த சாதனையைப் புரியும் கதாநாயகன் விஜய்தான்.
கேரளாவைப் பொறுத்தவரையிலும், பிகில் திரைப்படம்தான், அதிக வசூல் வேட்டையில் ஈடுபட்ட தமிழ் திரைப்படமாம். இதற்கு முன்னர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘ஐ'-தான் அங்கு அதிக வசூல் செய்ததாம். தற்போது பிகில், 19.65 கோடி ரூபாயை கேரளாவில் வசூல் செய்துள்ளது எனத் தகவல்.
பிகில் திரைப்படம், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தால், சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. விஜய்யுடன் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷ்ராஃப், கதிர், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)