விகாஸ் துபே கவிழ்ந்த காரிலிருந்து தப்பிக்க முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைலைட்ஸ்
- விபத்தில் கார் சிக்கியது அவர் தப்ப முயன்றபோது கொல்லப்பட்டார்
- மத்திய பிரதேசத்தின் உள்ள ஒரு கோவிலில் விகாஸ் துபே நேற்று கைதானார்
- மனைவியும் மகனும் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
Kanpur: உத்தர பிரதேச ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டு மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது சாலை விபத்தில் அவர் சென்ற கார் சிக்கியது. பின்னர் அங்கிருந்து அவர் தப்ப முயன்றபோது கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் ஒரு காவல்துறை உயர் அதிகாரி உட்பட 8 காவலர்களை கொன்ற விகாஸ் துபே பல இடங்களுக்கு தப்பி சென்றார். கான்பூரில் உள்ள தனது கிராமத்திலிருந்து ஹரியானாவின் ஃபரிதாபாத் வரை சென்றார், அங்கு போலீசார் வருவதற்கு சற்று முன்பு ஒரு ஹோட்டலில் இருந்து தப்பினார். பின்னர் 1,500 கி.மீ பயணத்தில் சோதனை செய்யப்படாமல் ராஜஸ்தானில் கோட்டாவிற்கும், இறுதியில் மத்திய பிரதேசத்திற்கும் சென்றார்.
பின்னர் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் உள்ள ஒரு கோவிலில் விகாஸ் துபே நேற்று கைது செய்யப்பட்டார்.
"நாங்கள் அவரது கூட்டாளிகள் பலரைப் பிடித்தோம், ஒரு சிலர் கொல்லப்பட்டனர். எனவே நிச்சயமாக அவர் தனது உயிரையும், காப்பாற்ற முயற்சிக்கிறார்." என காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் விகாஸ் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். துபேயின் இரண்டு கூட்டாளிகள் உத்தரபிரதேச காவல்துறையினரால் தனித்தனியான சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து துபேயின் மனைவியும் மகனும் லக்னோவில் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.