This Article is From May 11, 2020

விழுப்புரம் சிறுமி படுகொலை : தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் வழக்குப்பதிவு!!

சிறுமி எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 7 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு, தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement
தமிழ்நாடு Written by

செய்தித்தாள் மற்றும் செய்தி சேனல்களில் வெளியான தகவல்களை அடிப்படையாக வைத்து இந்த வழக்கு பதிவாகியுள்ளது.

Highlights

  • விழுப்புரம் சிறுமி எரித்துக்கொலை நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியது
  • நாளிதழ்களில் வந்த செய்தி அடிப்படையில் என்.சி.பி.சி.ஆர். வழக்குப்பதிவு
  • 7 நாட்களில் பதில் அளிக்க விழுப்புரம் ஆட்சியருக்கு உத்தரவு

விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை உயிருடன் எரித்துக் கொன்றது தொடர்பாக தேசிய குழந்தைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி 7 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்த சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் முன்பகை காரணமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 95 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் அதிமுக பிரமுகர்களான கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. முன்விரோதம் காரணமாக இந்த கொடூர கொலை நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

சிறுமி எரித்துக் கொல்லப்பட்டதை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் தனது அறிக்கையில், ' குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி இது போன்ற சிறுமிகளையும் பெண்களையும் காப்பாற்றும். இந்தக் கொடூர கொலைக் குற்றத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவினர் சம்பந்தப்பட்டுள்ளதால், காவல்துறையினர் பெயரளவிற்குச் செயல்படாமல், சட்டத்தின் முழு வலிமையையும் நியாயமாகவும் வேகமாகவும் பயன்படுத்த வேண்டும். விரைந்து உச்சபட்ச தண்டனை கிடைக்கும்படிச் செய்ய வேண்டும்.' என கேட்டுக் கொண்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், 'ஆயிரம் முன்பகை இருந்தாலும் மனிதமும், இதயமும் உள்ளவர்களால் வாழ வேண்டிய சிறுமியை உயிருடன் எரிக்கும் குரூரத்தை அரங்கேற்ற முடியாது. இதற்கு காரணமானவர்களுக்கு விரைந்து தண்டனை வழங்கப்பட வேண்டும். அது இத்தகைய கொடியவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

இந்த நிலையில் தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. தி இந்து ஆங்கில செய்தித்தாள் மற்றும் செய்தி சேனல்களில் வெளியான தகவல்களை அடிப்படையாக வைத்து இந்த வழக்கு பதிவாகியுள்ளது. 

சிறுமி எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 7 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு, தேசிய குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement