இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்திக்கு வித விதமான பிள்ளையார் சிலைகளை நிறுவி, கொண்டாடினர் மக்கள். இந்திய அளவில் பிரசித்தி பெற்ற விநாயகர் சதூர்த்திக்கு, சென்னை ஒன்றும் விதிவிலக்கல்ல. சென்னைவாசிகள் கலை நயத்துடன் சூழலுக்குத் தகுந்தது போன்றொரு விநாயகர் சிலையை நிறுவி அசத்தியுள்ளனர்.
7,000 வாழைப்பூக்களைக் கொண்டு, 10 நாட்கள் பெரும் பாடுபட்டு 10 அடி உயர விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளனர் சென்னைவாசிகள்.
அமர்ந்த நிலையில் இருக்கும் இந்த விநாயகர் சிலையின் வலது கையில் ஸ்வஸ்திகம் பொறிக்கப்பட்டுள்ளது.
நிறுவிய முதல் நாளிலேயே மக்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்த இந்த சிலையுடன், பலர் செல்ஃபி எடுத்துக் கொண்ட சம்பவமும் நடந்தது.
சென்னையில் மட்டுமல்ல, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழலுக்கு ஏற்றாற் போல் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது.