This Article is From Jul 14, 2020

அசாமில் பிடிபட்ட 16 அடி நீளமுள்ள பிரம்மாண்ட பாம்பு - கிரங்கடிக்கும் வைரல் வீடியோ!!

இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டதில் இருந்து பல்லாயிரம் பார்வைகளைப் பெற்று வருகிறது.

அசாமில் பிடிபட்ட 16 அடி நீளமுள்ள பிரம்மாண்ட பாம்பு - கிரங்கடிக்கும் வைரல் வீடியோ!!

அசாமில் உள்ள ஸ்வாங்க் வன விலங்கு சரணாலயத்தில் வனத் துறையின் மேற்பார்வையுடன் பைத்தான் பாம்பு பத்திரமாக விடப்பட்டது. 

அசாம் மாநிலத்தில் மிகப் பெரிய பர்மீஸ் பைத்தான் வகைப் பாம்பு பிடிபட்டுள்ளது. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தால் இந்த அலறவைக்கும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தென்படும் ஒருசில பிரம்மாண்ட பாம்புகளில் பர்மீஸ் பைத்தானும் ஒன்று ஆகும். 

அசாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் இந்தப் பாம்பு பிடிபட்டுள்ளது. ஒரு சிறிய ஆட்டை வேட்டையாடி உண்ணும் சமயத்தில் பர்மீஸ் பைத்தானை மக்கள் பார்த்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்தப் பாம்பு கட்டுக்குள் வரைவைக்கப்பட்டது. பாம்மை பத்திரமாக மீட்ட விலங்குகளை மீட்கும் வல்லுநர், ‘இந்தப் பாம்பு 38 கிலோ வரை இருக்கலாம். 16 அடி நீளம் கொண்டது' என ஆச்சரியத் தகவலைக் கொடுத்துள்ளார். 

பாம்பு பிடிக்கப்பட்ட பின்னர் அதைச் சுற்றி நின்று அதிர்ச்சியில் பார்க்கும் கிராமவாசிகளை வீடியோவில் பார்க்கலாம். வைரல் வீடியோவைப் பார்க்க:

இந்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்டதில் இருந்து பல்லாயிரம் பார்வைகளைப் பெற்று வருகிறது.

அசாமில் உள்ள ஸ்வாங்க் வன விலங்கு சரணாலயத்தில் வனத் துறையின் மேற்பார்வையுடன் பைத்தான் பாம்பு பத்திரமாக விடப்பட்டது. 

உலகில் வாழும் மிகப் பெரிய 5 பாம்பு இனங்களில் பர்மீஸ் பைத்தானும் ஒன்று. 2009 ஆம் ஆண்டு வரை இந்தப் பாம்பு இந்திய பைத்தான் பாம்பு வகையில் ஒன்றுதான் என்று கூறப்பட்டு வந்தது. பிறகுதான் இவை தனி வகைப் பாம்பு என அங்கீகரிக்கப்பட்டன. 

மியான்மர் நாட்டிலிருந்து இந்தப் பாம்பு தெற்கு ஆசியாவின் பல நாடுகள் வரை வசிக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் பாம்புகள் அதிகபட்சமாக 25 அடி உயரமும், 137 கிலோ எடை வரைக்கும் வளர வாய்ப்புள்ளதாம். இந்த வகைப் பாம்பு, தனது இரையை பிடியில் இறுக்கிக் கொல்லும். 
 
Click for more trending news

.