This Article is From Feb 19, 2020

Man Vs Wild-ல் ரஜினிகாந்த்… மோஷன் போஸ்டரை வெளியிட்ட பியர் கிரில்ஸ்!!

Rajinikanth in Man vs Wild- கடந்த ஆண்டு பியர் கிரில்ஸின் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

Man Vs Wild-ல் ரஜினிகாந்த்… மோஷன் போஸ்டரை வெளியிட்ட பியர் கிரில்ஸ்!!

Rajinikanth in Man vs Wild- "இந்த மாபெரும் ஸ்டாருடன் நேரத்தை செலவு செய்ததன் மூலம் அவரின் இன்னொரு பக்கத்தை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது,”

New Delhi:

Rajinikanth in Man vs Wild- சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், டிஸ்கவரி சேனல் பிரபலம் பியர் கிரில்ஸுடன் பங்கு பெரும் Man Vs Wild சிறப்பு நிகழ்ச்சிக்கான மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. Into The Wild எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கான மோஷன் போஸ்டரை பியர் கிரில்ஸே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மோஷன் போஸ்டரில் ரஜினிகாந்தும், கிரில்ஸும் ஒரு மரண மாஸான ஜீப் முன்னர் நின்று போஸ் கொடுக்க, ஆக்ரோஷ இசையுடன் நெருப்புக் கொப்பளிக்க இன்ட்ரோ கொடுக்கப்படுகிறது. 

இது குறித்து கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ரஜினிகாந்தின் ப்ளாக்பஸ்டர் டிவி அறிமுகத்துக்கான மோஷன் போஸ்டர் இது. நான் பல நட்சத்திரங்களுடன் வேலை செய்துள்ளேன். ஆனால், இது ஸ்பெஷல். லவ் இந்தியா” என்று #ThalaivaOnDiscovery என்கிற ஹாஷ்-டேக்குடன் பகிர்ந்துள்ளார். 
 

மேலும் அவர், “ரஜினிகாந்த் எப்போதும் ஒரு ஸ்டைலான ஆள்தான். ஆனால் காட்டில் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். இந்த மாபெரும் ஸ்டாருடன் நேரத்தை செலவு செய்ததன் மூலம் அவரின் இன்னொரு பக்கத்தை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது,” என்று சூப்பர்ஸ்டாரை புகழ்ந்துள்ளார். 

கடந்த ஆண்டு பியர் கிரில்ஸின் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

.