இந்த விபத்து குறித்தான சில புகைப்படங்களும் ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது. அதைப் பார்க்கும்போது இது எந்த அளவுக்கு மோசமான விபத்து என்பது புரியும்.
சாலை விபத்துகள் குறித்த வீடியோக்கள் சில நேரங்களில் நம்மை அதிர்ச்சியடைய வைக்கும் ரகமாக இருக்கும். ஆனால், போலாந்து நாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று நமக்கு கிலி கொடுத்துவிடும் வகையில் உள்ளது.
போலாந்து நாட்டின் ராபீன் என்னும் கிராமத்துக்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது. சாலையில் வேகமாக வந்துள்ள சுசூகி ஸ்விஃப்ட் கார், ரோட்டுக்கு நடுவே இருந்த ரவுண்டானாவில் வேகமாக மோதியுள்ளது. அடுத்த கணமே எதிர்பாராத வகையில் செங்குத்தாக மேல் நோக்கிப் பறக்கிறது வாகனம். தொடர்ந்து அந்த வாகனம் ஒரு மரத்தைப் பாதியாக முறித்து, ஒரு கட்டடத்தின் மேல் போய் விழுகிறது.
இந்த விபத்தில் ரவுண்டானாவுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த போப் சிலை தரைமட்டமாக்கப்பட்டிருக்கும். மயிரிழையில் அது தப்பியது.
வாகனத்தை ஓட்டிவந்த 41 வயது டிரைவரை, சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த தீயணைப்புத் துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து கொடூரமானதாக இருந்தபோதும், டிரைவர் சுய நினைவோடே இருந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. இந்த விபத்தில் சிக்கிய வாகன ஓட்டிக்குப் பெரிதாக எந்தக் காயமும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
அந்த வீடியோவைப் பார்க்க:
இந்த வீடியோ ஆன்லைனில் பகிரப்பட்டதிலிருந்து பல லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் இதை பகிர்ந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்தான சில புகைப்படங்களும் ஆன்லைனில் பகிரப்பட்டுள்ளது. அதைப் பார்க்கும்போது இது எந்த அளவுக்கு மோசமான விபத்து என்பது புரியும்.
இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட டிரைவர், வாகனத்தை ஓட்டியபோது மது போதையில் இருந்தாரா என்று தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
Click for more
trending news