বাংলায় পড়ুন Read in English
This Article is From May 12, 2020

சினிமா போலீஸுக்கு சவால்: கார் மேலே நின்று ஸ்டன்ட் அடித்த போலீஸுக்கு நேர்ந்த கதி!! #Video

டிராஃபிக் விதிமுறைகளை மதிக்காமல் நடந்து கொண்டது காரணத்திற்காக மனோஜுக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
நகரங்கள் Edited by

Madhya Pradesh: இந்த வைரல் வீடியோவைத் தொடர்ந்து மனோஜ் யாதவ் வகிந்த வந்த போலீஸ் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

Damoh :

காவல் துறை சார்ந்த சினிமாக்களில், கதாநாயகன் போலீஸாக இருந்தால், கொடுக்கும் மாஸ் என்டிரியை தோற்கடிக்கும் அளவுக்கு நிஜ போலீஸ் ஒருவர் செய்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. 

மத்திய பிரதேச மாநிலத்தில் துணை ஆய்வாளராக இருப்பவர் மனோஜ் யாதவ். அவர், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனின் ‘சிங்கம்' படப் பாடலை இசைக்கவிட்டு, இரண்டு கார் மீது நின்று, பில்ட்-அப்பான சர்ச்சைக்குரிய விஷயத்தை செய்துள்ளார். இது படமாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் படுவைரலாக மாறியுள்ளது. 

இது துரதிர்ஷ்டவசமாக மாநில போலீஸ் உயர் அதிகாரிகள் பார்வைக்கும் சென்றுள்ளது. இதனால் கொதிப்படைந்த சாகர் பகுதியின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அனில் ஷர்மா, மனோஜ் சார்ந்திருக்கும் டாமோ காவல் நிலைய தலைவருக்கு, தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். 

இந்த வைரல் வீடியோவைத் தொடர்ந்து மனோஜ் யாதவ் வகிந்த வந்த போலீஸ் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொறுப்புகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். 

மேலும் டிராஃபிக் விதிமுறைகளை மதிக்காமல் நடந்து கொண்டது காரணத்திற்காக மனோஜுக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 

Advertisement


 

Advertisement