2018 ஆண்டு சமூக வலைத்தளங்களில் பல சாலஞ்ச் விளையாட்டுகள் ட்ரெண்ட் ஆகின. தற்போது #InMyFeelings சாலஞ்ச் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சாலன்ஜில், மெதுவாகும் ஓடும் காரின் கதவை திறந்து, பிரபல பாடகர் ட்ரேக்கின் “இன் மை ஃபீலிங்ஸ்” பாடலை பாட வேண்டும். சமூக வலைத்தளத்தின் விபரீதமான சாலஞ்ச் தான் என்றாலும், நெட்டிசன்கள், இதை ஆர்வமுடன் செய்து வருகின்றனர்.
இந்த விளையாட்டிற்கு கண்டனம் தெரிவித்து மும்பை காவல் துறையின் ட்விட்டர் பக்கத்தில் அறிவுரை கூறப்பட்டுள்ளது. “உங்களுக்கு மட்டும் ஆபத்து இல்லை, சுற்றி உள்ளவர்களுக்கும் இந்த விளையாட்டு ஆபத்தாக அமையலாம். இசை விளையாட்டு என்ற பெயரில் பொது இடங்களில் இடையூறு செய்யப்படுகிறது” என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உலகில் உள்ள முன்னனி பிரபலங்களும் இந்த போட்டியில் பங்கெடுத்து வீடியோ பதிவிட்டுள்ளனர். பிரபலா ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் முதல் தொலைக்காட்சி பிரபலம் நியா ஷர்மா வரை முக்கிய பிரபலங்கள் இந்த போட்டியில் பங்கெடுத்து உள்ளனர்.
உலகம் முழுவதும் வைரலாகி வரும் விளையாட்டிற்கு மும்பை காவல் துறை கடும் கண்டங்களை தொடர்ந்து பதிவு செய்து வருவது. இந்த சாலஞ்சிற்கு எதிராக ஸ்பெயின் காவல் துறையினரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது