‘இந்த சுறாவின் அளவைப் பாருங்கள். அனைவரும் பத்திரமாக இருப்பது மகிழ்ச்சி,’ என்று ஒருவர் பெருமூச்சு விடுகிறார்.
தென் ஆப்ரிக்காவில் படம் பிடிக்கப்பட்டுள்ள ஒரு வீடியோ, நெட்டிசன்களைத் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. Sea Rescue South Africa (NSRI), என்னும் தன்னார்வத் தொண்டு அமைப்பு, தனது ட்விட்டர் பக்கத்தில், தி கிரேட் வெள்ளை சுறா தொடர்பான ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளது.
NSRI பகிர்ந்துள்ள வீடியோ, ட்ரோன் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவின் பிளெட்டென்பர்க் பே என்னும் இடத்தில் இந்த காணொலி ரெக்கார்டு செய்யப்பட்டுள்ளது. வீடியோவில், பலர் மெதுவாக சர்ஃபிங் செய்து கொண்டிருக்க, ஒரு மிகப் பெரிய அளவிலான ‘தி கிரேட் வெள்ளை சுறா' அப்படியே கமுக்கமாக கீழே நீச்சல் அடிக்கிறது. சுறாவின் இருப்பை அறியாத டைவர்ஸ், தங்களது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சில நொடிகளே ஓடும் இந்த வீடியோ பார்ப்போருக்கு புல்லரிப்பைக் கொடுக்கும் வகையில் உள்ளது.
வீடியோவுடன் NSRI, ‘தெற்கு கேப் கடற்கரை மற்றும் கிழக்கு கேப் கடற்கரையை ஒட்டியுள்ள மக்கள் பத்திரமாக இருக்கும்படி அறிவுறுத்துகிறோம். பல இடங்களில் சுறா மீன்கள் தாக்குதல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளதால், இந்த எச்சரிக்கையை விடுக்கிறோம்,' என்று பதிவிட்டுள்ளது.
ஆன்லைனில் பகிர்ந்ததிலிருந்து பல்லாயிரம் வியூஸ்களை அள்ளியுள்ள இந்த வீடியோவுக்குக் கீழ் பலர் கருத்திட்டு வருகின்றனர்.
‘இந்த சுறாவின் அளவைப் பாருங்கள். அனைவரும் பத்திரமாக இருப்பது மகிழ்ச்சி,' என்று ஒருவர் பெருமூச்சு விடுகிறார்.
NSRI தரப்பு, ‘சுறா மீன்கள் தாக்கும் சம்பவங்கள் எப்போதாவதுதான் நடக்கும் என்றாலும், மக்கள் அதன் ஆபத்தைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். இதைப் போன்ற மிருகங்களோடுதான் நாம் கடலைப் பகிர்ந்த கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,' என்கிறது.
ஃபுளோரிடா மியூசியம் அளிக்கும் தகவல்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 140 சுறா மீன் தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 64 தாக்குதல்கள் சுறா மீன்களே வலியவந்து செய்தவையாகும்.
Click for more
trending news