இன்னொருவரோ, ‘பல மணி நேரம் பார்த்தாலும் எங்கு பல்லி உள்ளது என்பது தெரியவே இல்லை,’ என வருத்தப்படுகிறார்.
வன விலங்குகள் குறித்தான சில புகைப்படங்கள் அதிக ஆர்வமூட்டுவதாக இருக்கும். காரணம், அவைக் காட்டுச் சூழலில் எப்படி, எங்கு மறைந்திருக்கும் என்பதே தெரியாது. அப்படியொரு புகைப்படம் பல நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஏரின் மெக்கீ என்னும் அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆய்வு மாணவர், தன் ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பல்லி ‘மறைந்திருக்கும்' புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘எங்க இருக்குனு கண்டுபிடிங்க பார்ப்போம்' என்று சவால் விடுவார். அவரின் சில புகைப்படங்களில் பல்லிகளை சுலபமாக கண்டுபிடித்துவிட முடியும். சில நேரங்களில் எவ்வளவு மணி நேரம் ஸ்கிரீனைப் பார்த்துக் கொண்டே இருந்தாலும் பல்லி எங்கு உள்ளது என்பதை தேடிப் பார்த்துவிட முடியாது.
தற்போது அவர் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படத்தில், “பல்லிகள்… இதைப் போன்ற மரத்தில் வாழும் பல்லிகள் தந்திரமாக மறைந்து கொள்ளும் பண்புடையவை” எனப் பதிவிட்டுள்ளார். பழுப்பு நிறப் பல்லி, படத்தில் இருக்கிறது. ஆனால், அது எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை.
படத்தைப் பார்க்க:
படத்திற்கு லைக்ஸ்கள் குவிந்து வரும் நிலையில், சிலர்,
‘500 சதவீதம் படத்தை ஜூம் செய்து பார்த்தபோதுதான் என்னால் பல்லியைக் கண்டுபிடிக்க முடிந்தது,' என்கிறார் ஒருவர்.
இன்னொருவரோ, ‘பல மணி நேரம் பார்த்தாலும் எங்கு பல்லி உள்ளது என்பது தெரியவே இல்லை,' என வருத்தப்படுகிறார்.
மற்றொருவரோ, ‘படத்தை ஜூம் செய்து பார்த்தால் ஏமாற்றுவது போலவா?' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
பல்லி எங்கு உள்ளது என்று தெரியவில்லையா. விடையைத் தெரிந்து கொள்ளுங்கள்.
Click for more
trending news