ஆனால் வேறு சிலரோ, இந்தப் படம் ‘போட்டோஷாப்’ செய்யப்பட்டதா என்கிற சந்தேகத்தை எழுப்பினார்கள்.
வன விலங்குகள் சார்ந்து வனம் சார்ந்தும் ட்வீட்டுகள் பதிவிடுவதில் பெயர் போனவர் இந்திய வனத் துறை அதிகாரி சுசாந்தா நந்தா. தற்போது அவர் பதிவிட்டுள்ள ஒரு போட்டோவால் ட்விட்டரில் பெரிய களேபரமே நடந்து வருகிறது. வனம் சார்ந்த ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார் நந்தா. அதில் எத்தனை புலிகள் இருக்கின்றன என்று கண்டுபிடியுங்கள் என்று தனது பின்தொடர்பாளர்களுக்கு சவால் விட்டார். மேலும் அவர், அடர்ந்த புல்வெளிக்கு நடுவில் புலி இருக்கும் படத்தையும் பகிர்ந்தார்.
பதிவிட்ட படங்களுடன் நந்தா, “இடது புறத்தில் இருக்கும் படத்தில் புலி இருப்பதைப் பார்க்கலாம். வலது புறத்தில் இருக்கும் படத்தில் புலிகள் இருப்பதைப் பார்க்க முடிகிறதா?” எனக் கேள்வி எழுப்பினார்.
அவர் பகிர்ந்த படம் தெளிவாக இல்லை என்று பலர் புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து அவர் தெளிவான வேறொரு படத்தையும் பகிர்ந்தார்.
ஆனால், அந்தப் படத்தையும் வைத்து எத்தனை புலிகள் படத்தில் இருக்கின்றன என்று பலரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பலரும் அது குறித்து கருத்திட்டுள்ளனர்.
ஆனால், சிலரோ புலி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் வேறு சிலரோ, இந்தப் படம் ‘போட்டோஷாப்' செய்யப்பட்டதா என்கிற சந்தேகத்தை எழுப்பினார்கள்.
நியூ ஹாம்ஷயர் பிபிஎஸ் கொடுக்கும் தகவல்படி, பெரிய புற்களுக்கு நடுவில் புலியால் மறைந்து கொள்ள முடியும் என சொல்லப்படுகிறது. “அதன் தங்க காவி கோடுகள் புற்களுடன் இணைந்துவிடுகின்றன. கருங்காவி மற்றும் கருப்புக் கோடுகளால் நிழலுடன் கலந்து விடுகின்றன. இப்படிப்பட்ட புற்களுக்கு நடுவில் புலி இருந்தால் அதைக் கண்டுபிடிப்பது சிரமம்தான்,” என்று விளக்கப்படுகிறது.
Click for more
trending news