இந்தப் படத்தைப் பகிர்ந்த ஒருவர், “இது மிகவும் அழகாக உள்ளது” என்றார். இன்னொருவர், “இது ஒரு ஓவியம் போல உள்ளது” என்று நெகிழ்ந்துள்ளார்.
கடல் அலை போல உருவான மேகக் கூட்டத்தின் புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகிறது. விர்ஜினியா ஏரியின் ஸ்மித் மலைக்குப் பக்கத்தில் கடந்த செவ்வாய் கிழமை இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கடல் அலைபோல இருக்கும் மேகதுக்கு “கெல்வின்-ஹெல்ம்ஹோல்ட்ஸ்” என்று பெயர். இந்த மேகக் கூட்டத்தைப் படம் பிடித்தவர் ஏமி கிரிஸ்டீன் ஹன்டர் என்பவர். அவர் தனது முகநூல் பக்கத்தில் இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளார். அங்கிருந்துதான் இந்தப் படம் இணைய வைரலாக மாறியுள்ளது.
“ஸ்மித் மலைக்கு மேலே இன்று மாலை இந்த அழகான மேகக் கூட்டம் மிதந்து சென்றது. இதற்குப் பெயர் கெல்வின்-ஹெல்ம்ஹோல்ட்ஸ் ஆகும். இந்தப் படத்தை நம் உள்ளூர் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தேன். இது குறித்து வானிலை ஆய்வாளர் ஒருவர், ‘இதைப் போன்ற மேகக் கூட்டங்கள் தென்படுவது மிகவும் அதிசயம் ஆகும். இவ்வளவு தெளிவாகவும் அவை தெரிய வாய்ப்பில்லை' என்று ஆச்சரியத்துடன் தெரிவித்தார்” என்று படத்துன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் படத்தை கீழே பார்க்கலாம்:
இந்தப் படத்தைப் பகிர்ந்த ஒருவர், “இது மிகவும் அழகாக உள்ளது” என்றார். இன்னொருவர், “இது ஒரு ஓவியம் போல உள்ளது” என்று நெகிழ்ந்துள்ளார்.
வானிலையில் ஸ்திரத்தன்மை இல்லாத போது இதைப் போன்ற கடல் அலை மேகக் கூட்டம் உருவாகும்.
Click for more
trending news