Read in English
This Article is From Jul 04, 2020

ஏ.ஆர்.ரகுமான் கான்சர்ட்; தெறிக்கவிட்ட சித் ஸ்ரீராம், பென்னி டாயல்!- சில்லடவைக்கும் வைரல் வீடியோ

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி பாடகராக சித் ஸ்ரீராம் திகழ்ந்தாலும், அவர் ‘கடல்’ படத்தின் மூலம் அறிமுகம் செய்தது ரகுமான்தான். 

Advertisement
விசித்திரம் Edited by

பிரபல பின்னணி பாடகர்கள் சித் ஸ்ரீராம் மற்றும் பென்னி டாயல் ஆகியோரின் ‘மெர்சல்’ பெர்ஃபார்மென்ஸ் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் ரகுமான்.

தற்போது நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் சூழல் காரணமாக, இசைக் கச்சேரிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் கூடிய விரைவில் நடக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஆனால், அப்படியொரு அசாத்திய நிகழ்ச்சி குறித்தான த்ரோ பேக் வீடியோவைப் பகிர்ந்து சில்லிட வைத்துள்ளார் ‘இசைப் புயல்' ஏ.ஆர்.ரகுமான். சென்னையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சியில், பிரபல பின்னணி பாடகர்கள் சித் ஸ்ரீராம் மற்றும் பென்னி டாயல் ஆகியோரின் ‘மெர்சல்' பெர்ஃபார்மென்ஸ் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் ரகுமான்.

கூடவே அவர், “த்ரோ பேக்… சென்னையில் கலக்கிய ரெண்டு பசங்க” எனப் பதிவிட்டுள்ளார். சில நொடிகளே ஓடும் அந்த வீடியோவில் சித் ஸ்ரீராம், ‘கடல்' திரைப்படத்தில் வரும் ‘அடியே' பாடலை இழுத்து இழுத்து வேற லெவலுக்கு கொண்டு சென்றார். அவருக்குப் பின்னர் பாடிய பென்னி டாயலும், தன் பங்குக்கு வாய் வித்தையைக் காட்டினார். இதைப் பார்க்கும் சென்னைக் கூட்டம், அப்படியே விண்ணைப் பிளக்கும் அளவுக்கு கரகோஷம் எழுப்பி ஆர்ப்பரிக்கிறது. 

வீடியோவைப் பார்க்க:

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி பாடகராக சித் ஸ்ரீராம் திகழ்ந்தாலும், அவர் ‘கடல்' படத்தின் மூலம் அறிமுகம் செய்தது ரகுமான்தான். 

Advertisement

வீடியோவுக்கு இதுவரை பல லட்சம் பார்வைகள் குவிந்துள்ள நிலையில், பல்லாயிரம் கமென்டுகளையும் பெற்றுள்ளது. 

வீடியோவுக்குக் கீழ் ஒருவர், “இருவரும் அசத்தியுள்ளார்கள்” என்கிறார்,

Advertisement

இன்னொருவரோ, “ராக்கிங் பெர்ஃபார்மென்ஸ்” எனப் புகழாரம் சூட்டுகிறார். 

2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்' திரைப்படத்தில் இசையமத்ததற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றார் ரகுமான். 
 

Advertisement