This Article is From Feb 21, 2020

2,800 அடியில இருக்கிற மலை உச்சியில இருந்து ஒரு போஸு… அள்ளு கிளப்பும் வீடியோ!!

Viral Video: விசிட் பிரேசில் என்கிற சுற்றுலா இணையதளத்தின்படி, இந்த வீடியோ எடுக்கப்பட்ட பெட்ரா டா காவியா என்னும் மலை முகடு

2,800 அடியில இருக்கிற மலை உச்சியில இருந்து ஒரு போஸு… அள்ளு கிளப்பும் வீடியோ!!

Viral Video: சிலர், தாங்கள் அந்த இடத்தில் எடுத்தப் படங்களையும் பகிர்ந்துள்ளார்கள்.

Viral Video: 

உயரமென்றால் உங்களுக்குப் பயமா. அப்படியென்றால் இந்த வீடியோ உங்களுக்கு அள்ளு கொடுக்கும். பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரியோவில் இருக்கும் 3000 அடி உயரமுள்ள மலை உச்சியிலிருந்து ஒரு சுற்றுலாப் பயணி போஸ் கொடுக்கும் வீடியோ படுவைரலாக பரவி வருகிறது. 

வீடியோவில் ஒரு பெண், பாறையின் உச்சிக்குத் தவழ்ந்து தவழ்ந்து வருகிறார். அவருக்குப் பின்புறம் நீலக் கடல் கொள்ளை அழகில் காட்சி தருகிறது. அந்தப் பெண்ணிற்குக் கீழ் ஒரு நகரம் விரவுகிறது. அப்படிப்பட்ட நேரத்தில்தான் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ட்விட்டரில் இந்த வீடியோ கடந்த ஞாயிற்றுக் கிழமை பகிரப்பட்டுள்ளது. இதுவரை வீடியோ, 1.3 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. 

வீடியோவைக் கீழே பார்க்கவும்:

'@influencersinthewild' என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதைப் போன்ற அதிர்ச்சிகர, துள்ளல் மற்றும் வைரல் வீடியோக்கள் இந்த இன்ஸ்டா கணக்கு மூலம் தினம் தினம் பகிரப்பட்டு வருகிறது. 

வெறும் 15 நொடிகளே ஓடும் அந்த வீடியோவுக்கு வரும் ரியாக்‌ஷன்கள் பெரியது…. மிக மிகப் பெரியது…:

சிலர், தாங்கள் அந்த இடத்தில் எடுத்தப் படங்களையும் பகிர்ந்துள்ளார்கள்:

விசிட் பிரேசில் என்கிற சுற்றுலா இணையதளத்தின்படி, இந்த வீடியோ எடுக்கப்பட்ட பெட்ரா டா காவியா என்னும் மலை முகடு, உலகில் கடற்கரைக்கு அருகில் இருக்கும் மிகப் பெரும் மலை என்று சொல்லப்படுகிறது. “3 மணி நேரம் காவியாவில் கஷ்டப்பட்டு ஏறினால், உச்சியை அடையலாம். மிகவும் அனுபவம் வாய்ந்த டிரெக்கர்ஸுக்கு மட்டுமே இந்தப் பயணம் சாத்தியமாகும்,” என்று அந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Click for more trending news


.