Read in English
This Article is From Jun 03, 2020

கொரோனா காலத்தில் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி?- வழிகாட்டும் ஆட்டோ ஓட்டுநர்!

இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்னர் டிக் டாக் தளத்தில் வைரலானது.

Advertisement
விசித்திரம் Edited by

இது குறித்தான வீடியோ டிக் டாக், ட்விட்டர் உள்ளிட்டப் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பெருமளவு பரவத் தொடங்கியது முதலே மருத்துவர்கள் மற்றும் சுகாதார வல்லுநர்கள், நம் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். குறிப்பாக கைகளை அடிக்கடி கழுவுவதன் மூலம் கொரோனாவிலிருந்து நம்மை எப்படித் தற்காத்துக் கொள்ளலாம் என்பது குறித்து பல பிரபலங்கள் தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கேரளாவில் உள்ள ஒரு ஆட்டோ ஓட்டுநர், தன் வாகனத்தில் செய்துள்ள ஒரு புதிய மாற்றம் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளன. இது குறித்தான வீடியோ டிக் டாக், ட்விட்டர் உள்ளிட்டப் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வீடியோவில் ஒருவர், ஆட்டோவில் சவாரி செய்யலாமா என்று கேட்கிறார். அதற்கு அந்த வாகனத்தின் ஓட்டுநர், முதலில் கைகளை கழுவுமாறு சொல்கிறார். அதற்கென்று பிரத்யேகமாக ஆட்டோவின் பக்கவாட்டில் ஒரு சிறிய குழாயுடன் சேர்ந்த தண்ணீர் டேங்க் வைக்கப்பட்டுள்ளது. அருகிலேயே ஹாண்டு வாஷும் பொருத்தப்பட்டுள்ளது. ஹாண்டு வாஷ் பயன்படுத்திக் கைகளை கழுவிய பின்னர், ஆட்டோ சவாரிக்காக நகர்கிறது. 

இந்த வீடியோ சில நாட்களுக்கு முன்னர் டிக் டாக் தளத்தில் வைரலானது. தற்போது தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவைப் பகிர்ந்து ஆட்டோ ஓட்டுநருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதனால் ட்விட்டரிலும் இது வைரலாக பரவி வருகிறது. 

இதுவரை ட்விட்டர் தளத்தில் இந்த வீடியோவுக்குப் பல்லாயிரம் பார்வைகள் கிடைத்துள்ளன. பலரும் ஆட்டோ ஓட்டுநருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.  

சிலர், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பயணி சரியாக மாஸ்க் அணியாதது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளனர். 

Advertisement
Advertisement