हिंदी में पढ़ें Read in English
This Article is From May 18, 2020

தப்பித்த புலி… வெறும் கயிறு வைத்து பிடித்த அதிசயம்… வைரல் வீடியோ!!

பலரும் இந்த வீடியோவை தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்தும், கருத்திட்டும் வருகின்றனர். பல்லாயிரம் பார்வைகளையும் இந்த வீடியோ பெற்றுள்ளது. 

Advertisement
விசித்திரம் Edited by

...இப்படியாக கையில் கிடைத்தப் பொருட்களை வைத்து, அந்தப் புலியை பிடித்தும் விடுகிறார்கள்.

பாம்பைக் கண்டால் மட்டுமல்ல புலியைக் கண்டாலும் படையே நடுங்கும். ஆனால், ஒரு சிலருக்கு அப்படி இருக்காது போல. மெக்சிக்கோ நாட்டில் ஒரு புலி தப்பித்து சாலையில் திரிந்த கொண்டிருக்க, அதை வெறும் கயிறு வைத்துப் பிடித்துள்ளனர். இது குறித்தான 20 நொடிகள் கொண்ட வீடியோ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வீடியோவில் 3 நபர்கள், சாலையில் தப்பித்து ஓடும் புலியைத் துரத்துகிறார்கள். ஒருவர், கவ்-பாய் தொப்பியுடனும் கையில் சுருக்குப் போட்ட கயிற்றுடனும் புலியை நோக்கி ஓடுகிறார். இன்னொருவர் இரும்பு நாற்காலியின் உதவி கொண்டு புலிக்கு வழிவிடாமல் தடுக்கிறார். இன்னொரு நபர், காரில் வந்து புலியை மடக்கிப் பிடிக்க உதவுகிறார். 

இப்படியாக கையில் கிடைத்தப் பொருட்களை வைத்து, அந்தப் புலியை பிடித்தும் விடுகிறார்கள். அதன் பிறகு என்ன ஆயிற்று என்பது குறித்து தெளிவில்லை. வீடியோ துண்டிக்கப்படுகிறது. 

Advertisement

ஆனால் Politico செய்தி நிறுவனம் அளிக்கும் தகவல்படி, இச்சம்பவம் மெக்சிக்கோவின் ஜாலிஸ்கோவில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புலியைப் பிடிக்கும்போது அந்தப் பக்கம் சென்ற இரு சக்கர வாகன ஒட்டுநரால் இந்த வீடியோ படமாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதைப் பார்க்க:
 

பலரும் இந்த வீடியோவை தங்கள் ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்தும், கருத்திட்டும் வருகின்றனர். பல்லாயிரம் பார்வைகளையும் இந்த வீடியோ பெற்றுள்ளது. 

சில கருத்துகள்:
 

‘ஒரு கயிறும் நாற்காலியும் இருந்தால் புலியைப் பிடித்து விட முடியும் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ளலாம்,' என ஒரு ட்விட்டர் பயனர் கிண்டல் செய்கிறார்.

Advertisement

இன்னொருவரோ, ‘முதலில் அது ஒரு மாடு என்று நினைத்தேன். பின்னர் உற்றுப் பார்த்தால் அது ஒரு புலி..!' என்று ஆச்சரியப்படுகிறார். 

புலி, எங்கிருந்து தப்பித்து சாலைக்கு வந்தது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை. ஆனால், உள்ளூர் தனியார் விலங்கியல் பூங்காவிலிருந்து புலி தப்பித்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

Advertisement