This Article is From Apr 14, 2020

லாக்டவுன் அலப்பறை: அடங்கி கிடந்த ஊர்… நீச்சல் குளத்தில் குதித்துக் குதித்து விளையாடிய குரங்குகள்!

இன்னொருவரோ, “இந்தக் குரங்குகள் மிக நன்றாக நீந்துகின்றன,“ என வியக்கிறார். 

லாக்டவுன் அலப்பறை: அடங்கி கிடந்த ஊர்… நீச்சல் குளத்தில் குதித்துக் குதித்து விளையாடிய குரங்குகள்!

Coronavirus Lockdown: குரங்குகள், காலியாக உள்ள நீச்சல் குளங்களை ஆக்கிரமிப்பது ஒன்றும் புதிதல்ல...

நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டிருப்பது யாருக்கு சந்தோஷமோ இல்லையோ, ஒரு குரங்குக் கூட்டத்திற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. மும்பையில் உள்ள போரிவாலி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில், ஊரடங்கு உத்தரவு காரணமாக நீச்சல் குளம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால், அதிலிருக்கும் தண்ணீர் அப்படியே விடப்பட்டிருந்ததால், குரங்குக் கூட்டம் ஒன்று அதை ஆக்கிரமித்தது. 

எப்போதாவது கிடைக்கும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குரங்குகள் நீச்சல் குளத்தில் குதித்து குதித்து விளையாடியுள்ளன. இந்த வைரல் சம்பவம் குறித்த வீடியோவை, பாலிவுட் நடிகர் டிஸ்கா சோப்ரா, ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அது பகிரப்பட்டத்திலிருந்து படுவைரலாக மாறியுள்ளது. 

அவர், “பல ஆண்டுகளாக இந்த நீச்சல் குளத்தைக் குரங்குக் கூட்டம் நோட்டமிட்டிருக்கும். சரியான வாய்ப்பைப் பார்த்து பாய்ந்துவிட்டார்கள்,” என நகைச்சுவையாக கருத்திட்டிருந்தார். 

நடிகை ரவீனா தாண்டோனும் வீடியோவைப் பகிர்ந்து, “பியூர் மங்கி ஃபன்,” என்று ஸ்மைலிக்களைப் போட்டுள்ளார். 

வீடியோவைப் பார்க்க:
 

பலரும் வீடியோவுக்குக் கீழே, நகைச்சுவையாக கமென்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர். 

“அருமையாக உள்ளது இந்த வீடியோ. தருணத்தை முழுமையாக அனுபவிக்கிறது குரங்குகள்,” என்கிறார் ஒரு ட்விட்டர் பயனர். 

இன்னொருவரோ, “இந்தக் குரங்குகள் மிக நன்றாக நீந்துகின்றன,“ என வியக்கிறார். 

குரங்குகள், காலியாக உள்ள நீச்சல் குளங்களை ஆக்கிரமிப்பது ஒன்றும் புதிதல்ல. சென்ற வாரமும் ஆள் அரவமற்றுக் கிடக்கும் நீச்சல் குளத்தைக் குரங்குக் கூட்டம் ஒன்று எப்படி ஆக்கிரமிக்கிறது என்பது குறித்தான வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, வைரலானது. 

What do you think of these videos? Let us know using the comments section. 

Click for more trending news


.