This Article is From Apr 24, 2020

மினி ஏலியன் போல ஊர்ந்து வரும் இது என்ன உயிரினம்..? - கிரங்கடிக்கும் வைரல் வீடியோ!!

இந்த வீடியோ ஒரு நாளைக்கு முன்னர் பகிரப்பட்டதிலிருந்து 50,000 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.

மினி ஏலியன் போல ஊர்ந்து வரும் இது என்ன உயிரினம்..? - கிரங்கடிக்கும் வைரல் வீடியோ!!

பலரும் இந்த காணொளியைப் பார்த்த பின்னர், திகைப்பில் கருத்திட்டு வருகின்றனர். 

சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு சில வீடியோக்கள் நம்மை ஒரு சில நாட்களுக்குத் தூங்க விடாமல் செய்துவிடும். காரணம், அந்த வீடியோவில் வரும் விஷயம் என்னவென்று நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதால்தான். அப்படியொரு வீடியோதான் ட்விட்டர் தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

வீடியோவில், ஒரு வினோத உயிரினம் இருப்பது தெரிகிறது. என்னவென்று தெரியாத அந்த உயிரினத்துக்கு 4 கால்கள் இருக்கின்றன. கண்கள் இருப்பதாக தெரியவில்லை. வாய் முழுக்கப் பற்கள் போல நீண்டிருக்கும் அமைப்பு வழியாக அது அப்படியே ஊர்ந்து வருகிறது. ஸ்ட்ரா மூலமாக கொடுக்கப்படும் உணவை அந்த உயிரினம் சாப்பிடுவது தெரிகிறது. இது குறித்து வீடியோவை பிரபல ட்விட்டர் தளமான @animalsandfools பகிர்ந்துள்ளது. தங்கள் பதிவுடன், ‘இது என்னவென்று யாருக்காவது தெரியுமா?' என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

வீடியோவைப் பார்க்க: 

இந்த வீடியோ ஒரு நாளைக்கு முன்னர் பகிரப்பட்டதிலிருந்து 50,000 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. பலரும் இந்த காணொளியைப் பார்த்த பின்னர், திகைப்பில் கருத்திட்டு வருகின்றனர். 

அதில் சில ரிப்ளைகள்:

ஆனால், சில ட்விட்டர் பயனர்களோ இந்த உயிரினம் ஃபின்ச் வகை பறவையின் குஞ்சு என்பதை கண்டுபிடித்துவிட்டனர். 

Click for more trending news


.