நான் மில்க் ஷேக்கை வாங்கும்போது உலகிலேயே வெறும் 30 பிங்க் நிற பக் நாய்கள்தான் இருந்தன என சொல்லப்பட்டது.
பக் (Pug) வகை நாய்கள் என்றாலே சிலருக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும். அதை செல்லப் பிராணிகளாக வளர்த்துப் பெருமைப்படுவர். அதுவும் அரியவகை பக் நாய் என்றால் கேட்கவா வேண்டும். ஆம்… லண்டனில் இருக்கும் பிங்க் நிற பக் நாயான ‘மில்க் ஷேக்' மிக அரிய வகை உயிரினம். உலகிலேயே வெறும் 100 பிங்க் பக் நாய்கள்தான் இருக்கின்றன என்று சொல்கிறது ‘போர்டு பாண்டா' என்னும் இணையதளம். 17 மாதங்கள் வயதுடைய மில்க் ஷேக், இணையத்தைக் கலக்கி வருகிறது.
பிங்க் நிற மேல் ரோமமும், நீல நிற கண்களும் கொண்ட மில்க் ஷேக், எந்த இடத்திலும் தனித்துத் தெரிகிறது. இதன் காரணமாகவே அதற்கு இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோவர்கள் உள்ளனர்.
மில்க் ஷேக்கின் உரிமையாளர் மரியா, அது பற்றிக் கூறும்போது, “மில்க் ஷேக்கைப் பார்க்கும் முன்னர், பிங்க் நிற பக் நாய் பற்றி நான் கேள்விப்பட்டது கூட கிடையாது. ஆனால், நான் மில்க் ஷேக்கை முதன்முதலில் பார்த்தபோது, மிக அழகாக இருந்தது. அவனை நான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று அப்போதே முடிவெடுத்து விட்டேன்.
இந்த வகை நாய்கள் மிக அரிதானவை. நான் மில்க் ஷேக்கை வாங்கும்போது உலகிலேயே வெறும் 30 பிங்க் நிற பக் நாய்கள்தான் இருந்தன என சொல்லப்பட்டது. இப்போது 100 பிங்க் பக் நாய்கள் இருக்கலாம்,” என்று சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
சுமார் 88,000 இன்ஸ்டா ஃபாலோவர்ஸை வைத்திருக்கும் மில்க் ஷேக்கின் ஒவ்வொரு படத்திற்கும் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிகின்றன.
மில்க் ஷேக் இப்படி இருப்பதனால், அதற்கு உடல்நலக் குறைபாடுகள் ஏதேனும் ஏற்படுமா என்பதற்கு மரியா, “இந்த வகை நிறதிலான நாய்கள் அல்பினோ எனப்படுகிறது. அப்படி இருந்தால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், மில்க் ஷேக் அல்பினோ கிடையாது. அவனுக்கு அதைப் போன்ற நிறம் மட்டும் இருக்கிறது. அவனுக்குப் பார்வைக் குறைபாடோ கேட்கும் திறனோ குறைவாக இல்லை. அவன் சந்தோஷமான ஆரோக்கியமான நாயாகவே இருக்கிறான்,” என்று பெருமைப்படுகிறார்.
Click for more
trending news