Tik Tok Viral: டிக் டாக்கில் மட்டுமல்லாமல் இன்ஸ்டா, ட்விட்டர் உள்ளிட்டத் தளங்களிலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
சின்ன வயதில் கார்ட்டூன் சேனல்களைப் பார்க்கும்போது, ஏதோ ஒரு காட்சியில் கார்ட்டூன் கேரக்டர், திடீரென்று வானில் பலூன்களைக் கட்டிக் கொண்டு பறக்கும். அடுத்த சில நொடிகளில் அந்த பலூன்கள் வெடித்து அந்த கார்ட்டூன் கேரக்டர் கீழே விழுவதையும் பார்த்திருப்போம். நம் சிறு வயது நினைவுகளில் மட்டும் இருந்த இந்த விஷயம் நிஜத்திலும் சாத்தியமாகியுள்ளது.
ஒரு கியூட் நாய் உரிமையாளர், தனது நாயின் பின்புறம் நிறைய ஹீலியம் பலூன்களைக் கட்டி, அதைப் பறக்கவிட்டு வீடியோ எடுத்துள்ளார். இது குறித்தான வீடியோ, முதன்முதலில் ‘டிக் டாக்' தளத்தில் பகிரப்பட்டது. ஏப்ரல் 1 ஆம் தேதி டிக் டாக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோ, செம வைரலாக மாறியுள்ளது.
வீடியோவில், ஒரு குட்டி நாய் பாதுகாப்புக் கண்ணாடி, மேல் சட்டையுடன் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அதனுடன் கலர் கலரான பலூன்களும் முதுகில் கட்டப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்க்கும் அந்த நாயின் உரிமையாளர், அதன் மீதிருந்து கையை எடுக்கிறார். அவ்வளவுதான், அப்படியே அந்த நாய் அந்தரத்தில் பறக்கிறது.
டிக் டாக் தளத்தில் பகிரப்பட்டதிலிருந்து இந்த வீடியோ, 19 மில்லியன் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளன. 3 மில்லியன் லைக்ஸ்களையும் குவித்துள்ளன. டிக் டாக்கில் மட்டுமல்லாமல் இன்ஸ்டா, ட்விட்டர் உள்ளிட்டத் தளங்களிலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
ட்விட்டரிலும் இந்த வீடியோவுக்கு 5 மில்லியன் வியூஸ் கிடைத்துள்ளன. பலரும் அதிசயத்தில் கருத்திட்டு வருகின்றனர்.
“இதுதான் எனது ஃபேவரைட் டிக் டாக் வீடியோ,” என்கிறார் ஒருவர்.
இன்னொருவரோ, “இந்த வீடியோவைப் பார்த்து சிரித்து சிரித்து எனக்குக் கண்ணீரே வந்துவிட்டது,” என்கிறார்.
Click for more
trending news