This Article is From Apr 16, 2020

இந்த புகைப்படத்தில ஒரு பாம்பு இருக்கு..! - உங்க கண்ணுக்குத் தெரியுதா..?

Viral Pic: அப்படியொரு படம்தான், கடந்த ஒரு வாரமாக ஃபேஸ்புக்கில் வளம் வந்து கொண்டிருக்கிறது.

இந்த புகைப்படத்தில ஒரு பாம்பு இருக்கு..! - உங்க கண்ணுக்குத் தெரியுதா..?

Viral Pic: உங்களால் பாம்பைப் பார்க்க முடிகிறதா?

சில நேரதங்களில் சமூக வலைதளங்களில், ஒரு படம் பகிரப்பட்டு அந்தப் படத்தில் ஓர் உயிரினம் மறைந்திருப்பதாகவும், அதைக் கண்டுபிடிக்க முடிகிறதா என்றும் சவால்விடப்படும். சில நேரங்களில் படத்தில் இருக்கும் உயிரினத்தை நம்மால் சுலபமாக கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், பல நேரங்களில் அது நமக்குத் தலைவலியை உண்டாக்கிவிடும். 

அப்படியொரு படம்தான், கடந்த ஒரு வாரமாக ஃபேஸ்புக்கில் வளம் வந்து கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘Snake Catchers Northern Rivers 24/7' என்னும் குழு தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில், ஒரு படத்தைப் பகிர்ந்து, ‘இந்தப் படத்தில் இருக்கும் பாம்பை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்,' என்று பதிவிட்டது.

அந்தப் படத்தைப் பாருங்க:

பலரும் படத்தைப் பல மணி நேரம் பார்த்து விரக்தியடைந்து, கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். 

ஒரு ஃபேஸ்புக் பயனர், “எவ்வளவு முயன்றும் என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை,” என்கிறார். இன்னொருவரோ, “பல மணி நேரங்களாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் பார்த்துக் கொண்டே இருக்கிறேன்,” என்று நொந்து கொள்கிறார். 

சிலரோ, படத்தில் இருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டனர். அதன் பின்னர் அவர்கள், “ப்ப்ப்பா… எவ்வளவு பெரிய பாம்பு,” என்று கருத்துப் பதிவிட்டு சிலரை கடுப்பேற்றியுள்ளனர். 

உங்களால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் இதைப் பாருங்க:
 

2dk9i0e

Snake Catchers Northern Rivers 24/7 குழு, பாம்பின் க்ளோஸ்-அப் படம் ஒன்றைப் பின்னர் பகிர்ந்து, அது ஒரு கோஸ்டல் கார்பெட் பைத்தான் வகைப் பாம்பு என்று கூறியது.  

Click for more trending news


.