This Article is From Jun 17, 2020

வைரல் வீடியோ: போலீஸ் டிரில் பயிற்சினா இப்படி இருக்கணும்! - பாட்டு பாடி அசத்தும் துணை எஸ்ஐ!

துணை எஸ்ஐ ரஃபியின் செயலைப் பாராட்டி பலரும் கமென்ட் பகுதியில் கருத்திட்டுள்ளனர். 

வைரல் வீடியோ: போலீஸ் டிரில் பயிற்சினா இப்படி இருக்கணும்! - பாட்டு பாடி அசத்தும் துணை எஸ்ஐ!

அவரின் ஆர்வமிகுதியுடன் டிரில் பயிற்சி கொடுக்கும் சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.

தெலங்கானாவைச் சேர்ந்த துணை எஸ்ஐ முகமது ரஃபி, புதிதாக போலீஸ் படையில் சேர்ந்த இளைஞர்களுக்கு வித்தியாசமாக பயிற்சி கொடுக்கும் வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தி திரைப்படங்களின் பிரபல பின்னணி பாடகர் முகமது ரஃபி என்பவரால் பாடப்பட்ட ‘தல் கயா தின்' என்னும் பாடலை பாடியபடியே, டிரில் பயிற்சிக் கொடுக்கிறார் எஸ்ஐ ரஃபி. 

அவரின் ஆர்வமிகுதியுடன் டிரில் பயிற்சி கொடுக்கும் சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது. அதை மூத்த ஐபிஎஸ் அதிகாரி அனில் குமார், தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பதிவுடன், ‘இந்த டிரில் பயிற்சியாளருக்கு சல்யூட்' என்று குறிப்பிட்டுள்ளார். அவர் பகிர்ந்த வீடியோ ஒரு லட்சம் பார்வைகளுக்கு மேல் பெற்றன.

இன்று காலை அதே வீடியோ ஐபிஎஸ் சங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிரப்பட்டது. வீடியோவுடன், “முகமது ரஃபிக்கு, லெஜெண்டு முகமது ரஃபியுடன் வெறும் பெயர் தொடர்பு மட்டுமல்ல. புதிதாக போலீஸ் படையில் சேர்ந்து சோர்வில் இருந்தவர்களுக்குப் பாட்டு பாடி உற்சாகம் ஊட்டியபடி டிரில் கொடுக்கிறார்,” என்று பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளது. 

துணை எஸ்ஐ ரஃபியின் செயலைப் பாராட்டி பலரும் கமென்ட் பகுதியில் கருத்திட்டுள்ளனர். 

41 வயதாகும் ரஃபி, டெக்கான் கிரானிக்கல் செய்தி நிறுவனத்துக்குத் தனது பயிற்சி குறித்து, “போலீஸில் சேரும் இளம் வயதினருக்கு நான் 2007 முதல் பயிற்சி கொடுத்து வருகிறேன். அவர்களின் நாட்கள் காலை 4:30 மணிக்கு ஆரம்பிக்கும். இரவு 8 மணி வரை பயிற்சி தொடரும். அவர்களுக்கு இருக்கும் சோர்வைப் போக்கவே இதைப் போன்ற ஒரு உத்தியைக் கையாண்டு வருகிறேன்,” என்கிறார். 

Click for more trending news


.