Read in English
This Article is From Apr 11, 2020

15 அடி பள்ளத்திலிருந்து முட்டி மோதி ஏறிய யானை… பெரும்பாடுபட்டு கிட்டிய வெற்றி… வைரல் வீடியோ!

அதிகாரி சுதா, வீடியோவை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்ததிலிருந்து தொடர்ந்து வியூஸ்களை அள்ளி வருகிறது.

Advertisement
விசித்திரம் Edited by

பலரும் ஆச்சரியத்தில் வீடியோவுக்குக் கீழ் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். 

யானைக்கும் அடி சறுக்கும் என்று பழமொழி செல்லப்படுவதுண்டு. அப்படியொரு சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் நடந்துள்ளது. அங்கு ஒரு யானை, 15 அடி ஆழம் கொண்ட ஒரு பள்ளத்தில் தவறி விழுந்துள்ளது. அது பெரும் போராட்டத்திற்குப் பிறகு பள்ளத்திலிருந்து வெளியே வந்துள்ளது. இந்த நெகிழ்ச்சியூட்டும் சம்பவம் குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்திய வனத் துறை அதிகாரியான சுதா ராமன், சுமார் 2 நிமிடங்களைத் தாண்டி ஓடும் அந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஆந்திராவின் சித்தூரில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வீடியோவுடன் அதிகாரி சுதா, “வன விலங்குகளை நிர்வகிப்பது என்பதில் வேகமான வழி என்பது கிடையவே கிடையாது. ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு தன்மையைக் கொண்டவை. எனவே ஒவ்வொன்றும் அதன் தன்மைக்கு ஏற்றாற் போல் நிர்வகிக்கப்பட வேண்டும். சித்தூர் சரகத்தில் ஓர் யானையை வெற்றிகரமாக மீட்ட சம்பவத்தின் வீடியோ இது. கடைசி சில நொடிகளைத் தவறாமல் பாருங்கள்,” என்று வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். 

வீடியோவைப் பார்க்க:

அதிகாரி சுதா, வீடியோவை தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்ததிலிருந்து தொடர்ந்து வியூஸ்களை அள்ளி வருகிறது. பலரும் ஆச்சரியத்தில் வீடியோவுக்குக் கீழ் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். 

Advertisement

ஒருவர், “ஆவ்ஸம் வீடியோ மேம். இது என் நாளை முழுமையானதாக மாற்றியுள்ளது,” என நெகிழ்கிறார். இன்னொருவரோ, “இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட வனத் துறைக்கு வாழ்த்துகள். அந்த யானையும் கெட்டிக்காரத்தனமாக வந்துவிட்டது. மக்கள் அந்த யானைக்கு ஆரவாரம் செய்வது மகிழ்ச்சி,” என்று கருத்திட்டுள்ளார். 

Advertisement