சல்மான் கான் செய்த பாட்டில் கேப் சேலஞ்ச் (courtesy beingsalmankhan)
ஹைலைட்ஸ்
- சல்மான் கானின் பாட்டில் கேப் சேலன்ஞ்
- வாயால் ஊதி மூடியை திறக்கிறார்.
- சல்மான் கான் தபங் 3 படத்தில் நடித்து வருகிறார்.
New Delhi: சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சேலஞ்ச் ட் ரெண்டாவது வழக்கும். தற்போது ட் ராண்டாகி வருவது ‘பாட்டில் கேப் சேலஞ்ச்'. இந்த சேலன்ஞ்சை பலரும் செய்து காட்டி வருகின்றனர். ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஆகியோர் இந்த சவாலை செய்து முடித்து, அந்த வீடியோவை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.
நடிகர் அர்ஜூனும் இந்த சவாலை செய்து முடித்திருக்கிறார். இதைத் தொடர்ந்து சல்மான் கான் இந்த சவாலை கேலியாக எடுத்து செய்து வீடியோ ஒன்றை தன்னுடைய இண்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சல்மான்கான் தண்ணீர் பாட்டில் மூடியை வாயால் ஊதி திறந்து விட்டு பாட்டிலில் உள்ள தண்ணீர் அனைத்தையும் குடித்து முடிக்கிறார்.
இதோ சல்மான் கான் செய்த பாட்டில் கேப் சேலன்ஞ் வீடியோ:
நடிகர் குணால் கெம்மு செய்த கேலியான பாட்டில் கேப் சேலன்ஞ்
நடிகை பரினிதி சோப்ரா செய்த பாட்டில் கேப் சேலன்ஞ்
2.0 பட்சி அக்ஷய் குமார் செய்த பாட்டில் கேப் சேலன்ஞ்
சல்மான் கான் தபாங் 3 மற்றும் இன்சால்சா என்ற படங்களில் நடித்து வருகிறார்.