Veronica Duque wore an anatomy bodysuit to class.
ஸ்பானிஷ் பள்ளி ஆசிரியர் வித்தியாசமான கற்பித்தல் முறைக்காக இணையத்தில் வைரலாகியுள்ளார். 3ம் வகுப்பு மாணவர்களுக்கு உடல் உறுப்புகளின் செயல்பாடுகள் குறித்த பாடங்களை எடுக்க மனித உட்புற உறுப்புகள் கொண்ட உடைய அணிந்து வந்து பாடம் எடுத்துள்ளார்.
நியூயார்க் போஸ்ட் செய்தியின்படி வொரோனிகா டியூக் 15 ஆண்டுகளுக்கு மேலாக கற்பித்தல் பணியில் இருப்பதாகவும் தற்போது 3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல், ஆங்கிலம், கலை, சமூக ஆய்வுகள் மற்றும் ஸ்பானிஷ் பாடங்களை பயிற்றுவித்து வருகிறார்.
43வயதான வொரோனிகா வித்தியாசமான உடையுடன் இணையத்தில் வைரலானார்.அவர் தனது மாணவர்களுக்கு உயிரியலை வேடிக்கையாக கற்றுக் கொள்ள வைப்பதற்காக இந்த முறையை பயன்படுத்தியுள்ளார்.
”இளம் குழந்தைகளுக்கு உள் உறுப்புகளின் செயல்பாட்டினை புரிந்து கொள்வது மிகவும் என்பதை அறிந்தேன். அதற்காக இந்த முறையை முயற்சித்து பார்க்கலாம் என்று நினைத்தேன்” என்று வலைத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
வெரோனிகாவின் கணவர் தனது மனைவியுடன் வகுப்பிற்குச் சென்று, உடற்கூறியல் குறித்த பாடத்திற்காக பிரத்யேக ஆடையை அணிந்து சென்று பாடம் எடுத்ததை ட்விட்டரில் வெளியிட்டார்.
அவரின் பதிவு 13,000க்கும் மேற்பட்ட வகையில் ஷேர் செய்யப்பட்டு 66,000லைக்குகளுடன் வைரலாகி விட்டன.
”நான் ஒரு அதிர்ஷ்டசாலி இவர்தான் என் மனைவி. இவர் சிந்தனைகளின் எரிமலை. மனித உடல் செயல்பாடு குறித்த பாடத்தினை நடத்த அதை நிகழ்த்தியே காட்டியுள்ளார்”என்று மைக் மொராடினோஸ் எழுதி பதிவிட்டுள்ளார்.
வொரோனிகா கற்பித்தல் முறைக்காக வித்தியாசமாக சிந்திப்பது முதல் முறை அல்ல. வரலாற்றுப் பாடங்களுக்காக மாறு வேடம் அணிந்தும். மொழிகளை கற்பிக்கும் போது அட்டைக் குறிப்பினையும் பயன்படுத்துகிறார்.
Click for more
trending news