हिंदी में पढ़ें Read in English বাংলায় পড়ুন
This Article is From Jul 15, 2020

மனிதர்களைப் போல பற்கள், உதடுகள் கொண்ட ‘அதிசய மீன்’- இணையத்தைக் கலக்கி வரும் படம் உண்மையா..?

இந்த மீன் மலேசிய நாட்டைச் சுற்றி பல இடங்களில் தென்படுமாம். இதற்குப் பெயர் டிரிக்கர் மீன் (Trigger Fish) எனப்படுகிறது. 

Advertisement
விசித்திரம் Edited by

நேஷனல் ஜியோகிராஃபிக் அளிக்கும் தகவல்படி, இந்த மீன் மிக மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளுமாம்.

இணையத்தில் சுற்றி வரும் சில புகைப்படங்கள் நம்மை ஒரு கணம் அப்படியே உறைந்து போக வைக்கும். குறிப்பாக வித்தியாசமான உருவம் கொண்ட விலங்குகள் குறித்தான படம் நெட்டிசன்களின் தூக்கத்தையே கெடுத்துவிடும். அப்படி டிரெண்டாகும் பல புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் போலியானவையாகத்தான் இருக்கும். அப்படியொரு ‘அதிசய மீனின்' படம்தான் இணையத்தில் சில நாட்களாக வட்டமடித்து வருகிறது. 

ட்விட்டர் பயனர் ஒருவரால் இந்த மாதத் தொடக்கத்தில் ஒரு மீனின் இரண்டு படங்கள் பகிரப்பட்டிருந்தன. ஒரு படத்தில் மீனின் முன்புறமும், இன்னொரு படத்தில் அது பக்கவாட்டில் எப்படி இருக்கும் என்பதும் காட்டப்பட்டிருந்தது. மிக வித்தியாசமான உடல் அமைப்பகள் கொண்டிருந்தது அந்த மீன். அதன் உதடுகள் மற்றும் பற்கள் அப்படியே மனிதர்களுக்கு இருப்பது போலவே இருக்கின்றன. இதுதான் படம் வைரலாவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. 

படத்தைப் பார்க்க:
 

இந்த போஸ்டுக்குப் பலரும் லைக்ஸ் மற்றும் கமென்டுகள் பதிவிட்டு வருகிறார்கள். 

இந்த மீன் மலேசிய நாட்டைச் சுற்றி பல இடங்களில் தென்படுமாம். இதற்குப் பெயர் டிரிக்கர் மீன் (Trigger Fish) எனப்படுகிறது. 

Advertisement

நேஷனல் ஜியோகிராஃபிக் அளிக்கும் தகவல்படி, இந்த மீன் மிக மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளுமாம். தன் இரை மற்றும் தன்னைத் தாக்கும் விலங்குகளை வலுவான தாடை மற்றும் பற்கள் கொண்டு அதிரடியாக தாக்குமாம்.  

Advertisement