বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From May 18, 2020

தர்பூசணியை முகமூடி போல அணிந்து திருட்டில் ஈடுபட்ட களவாணிகள்!

இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் பகிரப்பட்டதிலிருந்து பலரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் கருத்திட்டு வருகின்றனர். 

Advertisement
விசித்திரம் Edited by

இப்படி வித்தியாசமான முறையில் திருட்டில் ஈடுபட்டதால் இருவரும் புகழ் பெற்றிருக்கலாம். ஆனால்...

திருடர்களில் சிலர், வந்த இடம் தெரியாமல் திருடிச் செல்வார்கள். சிலரோ, திருட்டை செய்யும் விதத்திலேயே வித்தியாசம் காட்டுவார்கள். அப்படியொரு சம்பவம்தான் அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் நடந்துள்ளது. அங்கு இரண்டு திருடர்கள், தர்பூசிணிப் பழத்தைக் குடைந்தெடுத்து, அதை முகமூடி போல போட்டு திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இணையத்தில் படுவைரலாக மாறியுள்ளது இச்சம்பவம் குறித்தான புகைப்படங்கள். 

உள்ளூர் போலீஸ் கொடுக்கும் தகவல்படி, இரண்டு திருடர்களும் காரில் வந்து Sheetz ஸ்டோர் என்னும் கடையில் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி வித்தியாசமான முறையில் திருட்டில் ஈடுபட்டதால் இருவரும் புகழ் பெற்றிருக்கலாம். ஆனால், அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டுவட்டதாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 

லூசியா போலீஸ் பகிர்ந்த வைரல் படங்கள் இதோ:

இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் பகிரப்பட்டதிலிருந்து பலரும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் கருத்திட்டு வருகின்றனர். 

Advertisement

கருத்திட்டவர்களில் ஒருவர், இரு திருடர்களும் கடைக்குள்ளேயே ஒரு இடத்தில் கேமராவுக்கு போஸ் கொடுத்ததாக சொல்லி, அது குறித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அந்தப் படமும் வைரலாகியுள்ளது.

‘அவர்களின் யோசிக்கும் திறனுக்காக பாராட்டியே ஆக வேண்டும்,' என்கிறார் ஒருவர். 

‘நீங்கள் நிறைய பேரை மாஸ்க் அணிந்து சாலைகளில் நடக்கவிட்டால் இதுதான் நடக்கும்,' என்று கேலி செய்கிறார் இன்னொரு ஃபேஸ்புக் பயனர். 
 

Advertisement
Advertisement