சரியான தருணத்தில் தன் இரையைத் தாக்க காத்திருக்கிறது அந்த பூனை இன வேட்டையாடி.
காட்டில் இரைக்கும் வேட்டையாடிக்கும் இடையில் நடக்கும் வாழ்க்கைப் போராட்டம் குறித்து வெளிவரும் வீடியோக்கள் எப்போதும் சுவாரியஸ்மானவ. ஆனால், சமீபத்தில் இந்தப் போராட்டம் குறித்த வெளியான ஒரு படம் நெட்டிசன்களை ‘வாவ்' போட வைத்துள்ளது.
இந்திய வனத் துறை அதிகாரியான ரமேஷ் பிஷ்னாய், என்பவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு மான், காட்டில் தலையைத் திருப்பி நின்றிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்தார். சாதாரணமாக மான் நிற்கும் படம்தான் இது என்று நாம் கடந்து செல்ல நினைத்தால், ‘ஒரு வேட்டையாடி தன் இரையைப் பார்க்கிறது. உங்களால் அது எங்கு உள்ளது எனப் பார்க்க முடிகிறதா?' எனக் கேள்வி எழுப்பி ட்விஸ்ட் வைத்தார்.
அவ்வளவுதான் ட்விட்டர் வாசிகள் பலர், புதிரை கண்டுபிடிக்க வேண்டும் என்று களமிறங்கினார்கள்.
அந்தப் படத்தைப் பார்க்க:
சிலர் சவாலை ஏற்றுக் கொண்டு வேட்டையாடி எங்கு உள்ளது என்பதை கண்டுபிடித்து விட்டனர்.
Others wondered if the predator was a cleverly camouflaged snake
உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? முடியவில்லை என்றால் பரவாயில்லை. படத்தின் மேற்புறம் இடது ஓரத்தில் ஒரு மாமிச உண்ணியின் காது வெளியே தெரியும். சரியான தருணத்தில் தன் இரையைத் தாக்க காத்திருக்கிறது அந்த பூனை இன வேட்டையாடி.
Click for more
trending news