বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From May 29, 2020

‘ஜஸ்ட்டு மிஸ் ஆனாலும் அவ்ளோதான்..!’- இமாச்சலத்தின் குறுகலான சாலையில் ஓர் பயணம்; வைரல் வீடியோ!

ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து பல்லாயிரம் பார்வைகளைக் குவித்து வருகிறது.

Advertisement
விசித்திரம் Edited by

பலரும் இந்த அசாதாரண வீடியோவுக்கு ஆச்சரியத்துடன் கருத்திட்டு வருகிறார்கள். 

இணையத்தில் இமாச்சல பிரதேசம் தொடர்பாக வைரலாகி வரும் ஒரு வீடியோ, பலமில்லாத இதயம் கொண்டவர்களுக்கானது அல்ல. இந்திய வனத் துறை அதிகாரி அங்குர் ராபிரா, சுமார் 54 நொடிகள் ஓடும் வைரல் வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ராபிரா, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இமாச்சல பிரதேசத்தின் சாம்பா மாவட்டத்தில் உள்ள சாச் பாஸ் பகுதிக்கு கார் மூலம் சென்றிருக்கிறார். அப்போதுதான் இந்த வீடியோவை அவர் படம் பிடித்துள்ளார். 

வீடியோவில், கார் சாலை நுணியில் செல்வதை நம்மால் உணர முடிகிறது. ஊர்ந்து செல்லும் அந்தப் பயணத்தின் ஒரு கட்டத்தில் அப்படியே தலைக்கு மேலிருந்து அருவி கொட்டுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலைப் பிரதேசம் ஒரு பக்கம் அப்படியே பரந்து விரிகிறது. 

Advertisement

வீடியோவுடன் ராபிரா, “இன்க்ரடிபிள் இந்தியா. மிகவும் கடினமான சாலைதான் மிக அழகான இடத்தை நமக்குக் காட்டுகிறது. இது சாதாரண சாலை இல்லை. ஆண்டின் 8-9 மாதங்களுக்கு பனியால் இப்பகுதி மூடப்பட்டிருக்கும்,” என்கிற ஆச்சரியத் தகவலையும் பகிர்ந்துள்ளார். 

ட்விட்டரில் இந்த வீடியோ பகிரப்பட்டதிலிருந்து பல்லாயிரம் பார்வைகளைக் குவித்து வருகிறது. பலரும் இந்த அசாதாரண வீடியோவுக்கு ஆச்சரியத்துடன் கருத்திட்டு வருகிறார்கள். 

அதில் சில கமென்ட்டுகள் இதோ:

Indian Rodie ப்ளாக் மூலம் தன் சாச் பாஸ் பயணம் குறித்து ராபிரா, “சாச் பாஸில் பயணம் என்றால் மிகவும் குறுகலான, ஆங்கும் இங்கும் பிளந்திருக்கும், அருகில் பள்ளத்தாக்கு உடைய சாலையில் நீங்கள் போக வேண்டும். இதனுடன் கூடுதலாக போகும் வழியெல்லாம் பல்வேறு நீர்வீழ்ச்சிகள் சாலையிலேயே வழிந்தோடும்,” என்று விளக்குகிறார். 

Advertisement

Advertisement