இன்னொருவர், “அது முகத்தைச் சுற்றி துணியைக் கட்டியது மனிதர்கள் செய்வது போலவே இருக்கிறது,” என ஆச்சரியப்படுகிறார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க முதல் வழியாக சுகாதார வல்லுநர்களும், அரசாங்கங்களும் பரிந்துரைப்பது முகக்கவசம் எனச் சொல்லப்படும் மாஸ்க் அணிவதுதான். இந்தியாவைப் பொறுத்தவரை வீட்டைவிட்டு வெளியே வரும் எந்தவொரு நபரும் முகக்கவசம் அணிந்துதான் பொது இடங்களுக்கு வர வேண்டும் என்று விதிமுறையே நடைமுறையில் உள்ளது. ஒவ்வொருவரும் மாஸ்க் அணிவதன் மூலம் கோவிட்-19 எனப்படும் கொரோனா தொற்றை வெகுவாக குறைக்க முடியும் என்று பல ஆய்வு முடிவுகள் சொல்லி வருகின்றன.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ ஒன்றில், குரங்கு ஒன்று மாஸ்க் போன்று துணியை அணிந்து செல்லும் வீடியோ பலருக்கு சிரிப்பை வரவழைத்துள்ளது. இந்த வீடியோ ஒன்றும் புதியதல்ல. கடந்த ஓராண்டு காலமாக இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வட்டமடித்து வருகின்றன.
வீடியோவில் ஒரு குரங்கு, சாலையில் கிடக்கும் துணியை எடுக்கிறது. அதை அப்படியே முகத்தைச் சுற்றி மாஸ்க் போன்று அணிகிறது. பின்னர், மனிதர்கள் போல அதனுடனேயே நடந்து செல்கிறது. கொரோனா வைரஸ் காலத்தில் இதைப் போன்ற ஒரு வீடியோவைப் பார்க்கும்போது, பலருக்கு அது புன்முறுவலைக் கொடுத்துள்ளது.
வீடியோவைப் பார்க்க:
இந்திய வனத் துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவரால் இந்த வீடியோ, ட்விட்டர் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. பல்லாயிரம் லைக்ஸ்களை குவித்து வரும் இந்த வீடியோவுக்கு, பலரும் கமென்ட் பதிவிட்டு வருகிறார்கள்.
ஒருவர், “போலீஸ் முகக் கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதைத் தெரிந்து கொண்டு இந்தக் குரங்கும் மாஸ்க் அணிந்துள்ளது,” என்கிறார் நகைச்சுவையுடன்.
இன்னொருவர், “அது முகத்தைச் சுற்றி துணியைக் கட்டியது மனிதர்கள் செய்வது போலவே இருக்கிறது,” என ஆச்சரியப்படுகிறார்.
Click for more
trending news