"தொற்று குறைந்த பின்னரான உலகில், இதைப் போன்ற சிறிய விஷயங்களின் மகிழ்ச்சிக்காக அதிக முக்கியத்துவம் கொடுப்போம் என்று நினைக்கிறேன்."
திங்கள் கிழமை என்றால், மீண்டும் ஒரு வாரத்துக்கான கடுமையான பணி செய்ய வேண்டும் என்கிற அழுத்தம் பெரும்பாலானோருக்கு வருவது இயல்பே. இருப்பினும் செய்யும் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் மேலெழும். அப்படி ஒரு வாரத்திற்கான பணியைச் செய்ய, முதல் நாளான திங்கட்கிழமை ஊக்கம் அளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் #MondayMotivation என்கிற ஹாஷ்-டேக்கில் பதிவிடுகள் இடுவது வழக்கம்.
அப்படியொரு நெகிழவைக்கும் வீடியோவைத்தான் #MondayMotivation என்கிற பெயரில் பதிவிட்டுள்ளார் மஹிந்திரா கார் நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா.
அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், இந்தியாவில் ஏதோ ஒரு மூளையில் இருக்கும் கிராமம் போன்ற ஒரு இடம் தெரிகிறது. அந்த இடத்தில் மிகப் பெரிய நீர்நிலை உள்ளது. அந்த நீர்நிலையின் கரையில் மணலில் சறுக்கிச் செல்லும் வகையில் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பில் அப்படியே மின்னல் வேகத்தில் சறுக்கிச் சென்று, நீர்நிலைக்குள் டைவ் அடிக்கின்றனர் சில சிறுவர்கள். பார்க்கப் பார்க்க பொறாமைப்பட வைக்கும் வகையில் உள்ள இந்த வீடியோ பலரால் விரும்பப்பட்டு வருகிறது.
“கொரோனா வைரஸ் தொற்று குறைந்த பின்னரான உலகில், இதைப் போன்ற சிறிய விஷயங்களின் மகிழ்ச்சிக்காக அதிக முக்கியத்துவம் கொடுப்போம் என்று நினைக்கிறேன். இந்த வீடியோ எனக்கு #MondayMotivation கொடுக்கிறது,” என காணொலியுடன் பதிவிட்டுள்ளார் மஹிந்திரா.
பல்லாயிரம் லைக்ஸ்களை குவித்துள்ள இந்த வீடியோவுக்குப் பலரும் நெகிழ்ச்சிப்பூர்வமான கமென்டுகளை இட்டு வருகின்றனர்.
ஆனந்த் மஹிந்திராவுக்கு ட்விட்டரில் சுமார் 80 லட்சம் பின் தொடர்பாளர்கள் உள்ளனர். அவர் ஊக்கம் அளிக்கும் வகையிலும், நகைச்சுவை வரவழைக்கும் வகையிலும் தொடர்ந்து பல்வேறு வீடியோக்களைப் பகிர்ந்து வருகின்றார்.
Click for more
trending news