நீச்சல் குளத்தில் விழுந்த குழந்தையைக் காப்பாற்றும் மற்றொரு 3 வயது குழந்தை
பிரேசிலில் 3 வயது குழந்தை ஒன்று, நீச்சல் குளத்தில் மூழ்கிய மற்றொரு குழந்தையைக் காப்பாற்றிய சம்பவம் வைரலாகியுள்ளது.
பிரேசிலுள்ள ரியோ டி ஜெனிரோ மாகாணத்தைச் சேர்ந்தவர் பொலியானா. இவருக்கு அர்தூர் என்ற 3 வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில், அர்தூர் ஒரு நாள் நீச்சல் குளத்தின் வெளியில் இருந்து தண்ணீரில் கை நனைத்து விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவன் அருகில் மற்றொரு 3 வயது குழந்தை வந்தது.
இருவரும் நீச்சல் குளத்தில் கை நனைக்கும் போது, அர்தூரின் நண்பன் நிலைதடுமாறி நீச்சல் குளத்தில் விழுந்தான். மேலும், நீச்சல் அடிக்கத் தெரியாததால், அப்படியே தண்ணீருக்குள் மூழ்கினான்.
இதைக் கண்ட அர்தூர் செய்வதறியாது உதவிக்கு மற்றவர்களை அழைக்க முயன்றான். இதனையடுத்து வேறு வழியின்றி, அர்த்தூரே அந்தக் குழந்தையைக் காப்பாற்ற முயன்றான்.
நீச்சல் குளத்தின் தடத்தில் இருந்து அர்த்தூர் கை நீட்ட, மற்றொரு குழந்தை அர்தூரின் கையைப் பிடித்துக் கொண்டது. இதனையடுத்து தண்ணீருக்குள் மூழ்கிய குழந்தையை அப்படியே அர்த்தூர் மீட்டெடுத்தான்.
3 வயது குழந்தை மற்றொரு குழந்தையைக் காப்பாற்றிய சம்பவம், சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அர்த்தூருக்கும், அவனது தாயார் பொலியானாவுக்கும் பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.
Click for more
trending news